சுக்கின் மருத்துவ பயன்கள் - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, May 10, 2025

சுக்கின் மருத்துவ பயன்கள்

 சுக்கின் மருத்துவ பயன்கள்


இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பதுதான் சுக்கு. சுக்கில் இருக்கும் காரத்தன்மை ஜீரணத்துக்குப் பிறகு மீதமிருக்கும் பித்தநீரை சமன் செய்கிறது.


நெஞ்சுவலி அடிக்கடி வந்தால் இளநீரில் சுக்குப்பொடி மற்றும் சர்க்கரை கலந்து பருகிவர உடனடி பலன் கிடைக்கும்.


அஜீரணத்தைப் போக்கும். வயிற்றுப் போக்கை குணமாக்கும்.


சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து சுக்கு நீர் காய்ச்சிக் குடித்துவர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.


ரத்தக் குழாய்களின் செயலை மேம்படுத்தி இதய இயக்கத்தை வலுவாக்குவதில் உதவி புரிகிறது.


சுக்கு, மிளகு, கொத்தமல்லி விதை, திப்பிலி, சித்தரத்தை இந்த ஐந்தையும் இட்டு கசாயம் செய்து குடித்துவர கடுஞ்சளி மூன்றே நாளில் குணமாகும்.


கடுகளவு சுக்குப் பொடியுடன் ஒரு தேக்கரண்டி தேனும், எலுமிச்சைசாறும் சேர்த்து நாள்தோறும் உண்டுவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


சுக்கு பொடியோடு ஒரு சில பூண்டு பற்களைச் சேர்த்து கொதிக்கவைத்து ஆவிபிடிக்க ஆஸ்துமா தணியும்.


பித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.


மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், மூட்டு வலி போன்ற பிரச்னைகளுக்கு சுக்கு நல்ல பலன் தரக்கூடியது. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.


சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.


பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு கருப்பை இயல்பு நிலைக்கு வரவும், பால் சுரப்பை தூண்டவும் சுக்கு உதவுகிறது.


சுக்கு, பெருங்காயம் சேர்த்து அரைத்து புண், காயம் உள்ள இடங்களில் தடவினால் விரைவில் குணமாகும்.


தலைவலி, மண்டைப்பிடி போன்றவற்றுக்கு சுக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது.


சளி, காய்ச்சல், தொண்டைக் கரகரப்பு, குரல்வளையில் பிரச்னை, காது அடைப்பு போன்ற பிரச்னைகளுக்கு சுக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கிறது.

No comments:

Post a Comment