டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு பதவிகளில் 330 காலிப்பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, May 10, 2025

டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு பதவிகளில் 330 காலிப்பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு

 டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு பதவிகளில் 330 காலிப்பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தாண்டு மொத்தம் 330 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் இப்பணியிடங்கள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் வரும் மே 13-ம் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னென்ன பதவிகள் நிரப்பப்படுகிறது, கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.


டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி மேலாளர், துணை இயக்குநர், உதவி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 330 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு வரும் மே 13-ம் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.


TNPSC CTS (Interview Posts) 2025


 அறிவிப்பின் விவரங்கள்

நேர்முகத் தேர்வு பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு மூலம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், கிமெண்ட்ஸ் நிறுவனம், மெக்னசைட் லிமிடெட், தொழில் வளர்ச்சி நிறுவனம், வனம், இந்து சமய அறநிலையத்துறை, நகர்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல், சட்டமன்ற பேரவை, நகர் மற்றும் ஊரமைப்பு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பெருநகர வளர்ச்சிக் குழுமம், காவல்துறை, பொது சுகாதாரம், தொல்லியல் உள்ளிட்ட துறைகளில் இருக்கும் பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகிறது.


துணை இயக்குநர், உதவி இயக்குநர், மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் தொழிற்சாலை மேலாளர், உதவி பொது மேலாளர், உதவி செயலாளர், அறிவியலாளர், முதன்மை பெருந்தச்சன், மண்டல பெருந்தச்சன், ஆங்கில நிருபர், தமிழ் நிருபர், உதவி இயக்குநர், உதவி கண்காணிப்பாளர், உதவி இயக்குநர் தொழிற்சாலை, உதவி திட்டமைப்பாளர், உளவியலாளர், முதுநிலை கணக்கு அலுவலர், ஆராய்ச்சி உதவியாளர், சமூகவியலாளர், முதுநிலை பூச்சியியல் நிபுணர், உதவி இயக்குநர் பயிற்சி, உதவி இயக்குநர் பயிற்சி, உதவி இயக்குநர், கால்நடை உதவி மருத்துவர் ஆகிய பதவிகள் என மொத்தம் 330 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.


வயது வரம்பு


இத்தேர்விற்கு விண்ணப்பிக்க 01.07.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 21 வயது வரை இருக்கலாம். பிசி, பிசிஎம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் அறிவியலாளர் பதவிக்கு அதிகபடியாக 45 வயது வரையும், உதவி திட்டமைப்பாளர், உதவி மேலாளர், உதவி மேலாளர் பதவிக்கு 34 -37 வயது வரையும் இருக்கலாம். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு தளர்வு உள்ளது.


கல்வித்தகுதி


டிஎன்பிஎஸ்சி-யின் ஒருங்கிணைந்த தொழில்நுப்ட பணிகள் தேர்வின் மூலம் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு அந்தந்த பதவிகளுக்கான பட்டப்படிப்பு மற்றும் இதர திறன் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். அனுபவம் தேவைப்படும் பதவிகளுக்கு அதற்கான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பள விவரம்


தமிழ்நாடு அரசு சம்பள விகிதம் அடிப்படையில் இப்பதவிகளுக்கு நிலை 22 முதல் நிலை 29 வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை


இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை


டிஎன்பிஎஸ்சி-யின் ஒருங்கிணைந்த தொழில்நுப்ட பணிகள் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


முக்கிய நாட்கள்


விண்ணப்பம் தொடங்கும் நாள்:


13.05.2025


விண்ணப்பிக்க கடைசி நாள்


11.06.2025 இரவு 11.50 மணி வரை


விண்ணப்பம் திருத்தம் செய்ய கால அவகாசம்


15.06.2025     12.01 மணி முதல் 17.06.2025 11.59 மணி வரை



எழுத்துத் தேர்வு


20.07.2025 முதல் 23.07.2025


டிஎன்பிஎஸ்சி-யின் ஒருங்கிணைந்த தொழில்நுப்ட பணிகள் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மே 13-ம் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment