வங்கியில் பணி புரிய 676 பணியிடங்களுக்கு ரூ 51,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Friday, May 9, 2025

வங்கியில் பணி புரிய 676 பணியிடங்களுக்கு ரூ 51,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு..!

 வங்கியில் பணி புரிய 676 பணியிடங்களுக்கு ரூ 51,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு..!


மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஐடிபிஐ வங்கியில் 676 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 51,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.


வங்கிகளில் வேலை பார்க்க வேண்டும் என்பது இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இடையே அதிக விருப்பம் இருக்கும். இதற்காக பயிற்சி மையங்களுக்கு சென்று தயாராகி வருகிறார்கள். இதிலும் பொதுத் துறை வங்கிகள் வெளியிடும் வேலைவாய்ப்பு அறிவிப்பினை எதிர்பார்த்து இளைஞர்கள் காத்திருந்து வருகிறார்கள். அவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஐடிபிஐ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கியில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வங்கி கிளைகள் உள்ளன. மத்திய அரசின் பொதுத்துறை வங்கி என்பதால் இந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளம் + சலுகை உள்ளிட்டவை கிடைக்கிறது.


பணியிடங்கள் விவரம்:


ஜூனியர் உதவி மேலாளர் (கிரேடு 'ஓ') - 676 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.


கல்வித் தகுதி:


அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். கணினி பற்றிய அறிவு அவசியம். உள்ளூர் மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பொதுத் தேர்வர்கள் என்றால் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (EWS and OBC) பிரிவினர் என்றால் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் படித்து தெரிந்துகொள்ளவும்.


வயது வரம்பு:


இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க விரும்பும் தேர்வர்கள், 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது, 01.03.2000 க்கு முன்பாகவோ 01.03.2005 பிறகோ பிறந்தவராக இருத்தல் கூடாது. எனினும் அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அறிவிக்கபட்டுள்ளன.


அதன்படி எஸ் சி / எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டு தளர்வுகளும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகள் தளர்வுகளும், மாற்றுத்திறனாளிகள்,(For PwBD (Gen/ EWS) என்றால் 10 ஆண்டுகள் தளர்வும், PwBD (SC/ ST) தேர்வர்களுக்கு 15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.


சம்பளம் எவ்வளவு?


சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6.14 லட்சம் முதல் 6.50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.


விண்ணப்பிப்பது எப்படி?


விண்ணப்பதாரர்கள் www.idbibank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் தேர்வு மற்றும் இண்டர்வியூவ் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


இன்று முதல் இந்த பணியிடங்களுக்கு தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 20.05.2025 அகும். விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை பொதுப்பிரிவினருக்கு ரூ.1050 கட்டணம் ஆகும். எஸ் சி / எஸ் டி என்றால் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதும்.


தேர்வு அறிவிப்பினை படிக்க


 https://www.idbibank.in/pdf/careers/Detailed-advertisement-JAM-2025-26.pdf

No comments:

Post a Comment