இந்திய பால்வள மேம்பாட்டுக் கழகத்தில் 6,300 காலிப்பணியிடங்களுக்கு ரூ.18,000 முதல் ரூ.2,15,900 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு...! - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, May 8, 2025

இந்திய பால்வள மேம்பாட்டுக் கழகத்தில் 6,300 காலிப்பணியிடங்களுக்கு ரூ.18,000 முதல் ரூ.2,15,900 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு...!

 இந்திய பால்வள மேம்பாட்டுக் கழகத்தில்  6,300 காலிப்பணியிடங்களுக்கு ரூ.18,000 முதல் ரூ.2,15,900 வரை  ஊதியத்தில் வேலை வாய்ப்பு...!


இந்திய பால்வள மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திட்ட மேனேஜர், மார்க்கெட்டிங் மேனேஜர், மாவட்ட மேனேஜர், கணக்காளர், கிளார்க், கள அலுவலர், டிரைய்னி அதிகாரி, தொழிற்பயிற்சி, உதவியாளர், டிரைவர், பாதுகாப்பாளர், பல்துறை பணியாளர் என பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 6,300 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.


இந்திய பால்வள மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. மேனேஜர், கணக்காளர், கணினி இயக்குபவர், கள அதிகாரி, லேம் டெக்னீஷியன், பியூன், பாதுகாப்பாளர், பல்துறை பணியாளர், எலெக்ட்ரிஷியன் உள்ளிட்ட பதவிகளில் 6,300 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு 8-ம் வகுப்பு தகுதி பெற்றவர்கள் முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.


பணியின் விவரங்கள்



திட்ட மேனேஜர் 56


பிராந்திய மேனேஜர் 85


மார்க்கெட்டிங் மேனேஜர்-104


நிர்வாக மேனேஜர்- 259


டிவிஷனல் மேனேஜர் - 311


மாவட்ட மேனேஜர்- 611


தாலுகா மேனேஜர்- 880


சேல்ஸ் மேனேஜர்- 273


உதவி சேல்ஸ் மேனேஜர்-273


கணக்காளர்- 156


கிளார்க்- 114


கணினி இயக்குபவர்- 225


பால் மைய மேனேஜர்- 489


கள அதிகாரி -249


பயிற்சி அதிகாரி -123


தொழிற்பயிற்சி -754


கடை மேற்பார்வையாளர்- 145


ஆய்வக உதவியாளர்- 143


உதவியாளர்- 280


ஓட்டுநர் -90


பியூன் 78


பாதுகாப்பாளர் 208


பல்துறை பணியாளர் -234


எலெக்ட்ரிஷியன் - 160


மொத்தம் 6,300


வயது வரம்பு


இந்திய பால்வள மேம்பாட்டுக் கழகத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்.


 அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம்.

திட்ட மேனேஜர், பிராந்திய மேனேஜர் பதவிகளுக்கு குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபடியாக 45 வயது வரை இருக்கலாம்.


மார்க்கெட்டிங் மேனேஜர், நிர்வாக மேனேஜர், டிவிஷனல் மேனேஜர் ஆகிய பதவிகளுக்கு குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம்.


வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் தளர்வு உண்டு.


கல்வித்தகுதி


திட்ட மேனேஜர் பதவிக்கு முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.


பிராந்திய மேனேஜர், மார்க்கெட்டிங் மேனேஜர், நிர்வாக மேனேஜர், டிவிஷனல் மேனேஜர், மாவட்ட மேனேஜர் ஆகிய பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.கணக்காளர் பதவிக்கு வணிகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.


தாலுகா மேனேஜர், சேல்ஸ் மேனேஜர், உதவி சேல்ஸ் மேனேஜர், கிளார்க், கணினி இயக்குபவர், பால் மைய மேனேஜர், ஆய்வக உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


கள அதிகாரி, பயிற்சி அதிகாரி, தொழிற்பயிற்சி, கடை மேற்பார்வையாளர், பல்துறை உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


எலெக்ட்ரிஷியன் பதவிக்கு அதற்கான ஐடிஐ முடித்திருக்க வேண்டும். உதவியாளர், ஓட்டுநர், பியூன், பாதுகாப்பாளர் ஆகிய பதவிகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.


இவையில்லாமல், திட்ட மேனேஜர் பதவிக்கு 5 வருடங்கள், பிராந்திய மேனேஜர் பதவிக்கு 3 வருடங்கள், மார்க்கெட்டிங் மேனேஜர் பதவிக்கு 2 வருடங்கள் மற்றும் இதர மேனேஜர் பதவிக்கு 1 வருடம் பணி அனுபவம் தேவை.


சம்பள விவரம்


இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 முதல் அதிகபடியாக ரூ.2,15,900 வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை


இந்திய பால்வள மேம்பாட்டுக் கழகத்தில் உள்ள அனைத்து பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணல் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://ddcil.org.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.675 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஒபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவினர் ரூ.390 செலுத்த வேண்டும்.


அறிவிப்பை பார்க்க 


https://ddcil.org.in/assets/Adv.%20No.%20Recruitment%20HR%20&%20Admin%202025-26%2001.pdf


விண்ணப்பிக்க கடைசி நாள்


 24.05.2025


இந்திய பால்வள மேம்பாட்டுக் கழகத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment