வீட்டு மின் சாதனங்களை பராமரிக்கும் முறைகள்..!
* பிரிட்ஜ் குழல் விளக்கை உபயோகித்து அணைத்த பின்பு உடனே போடாமல் சில நிமிடங்கள் கழித்துப் போட வேண்டும்.
* நில இணைப்புடன் கூடிய மூன்று மின் பிளக்குகள் மூலமாக பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற மின் சாதனங்களுக்கு இணைப்புக் கொடுக்க வேண்டும்.
* டி.வி.யை துடைக்கும்போது, அதற்கான திர வத்தை நேரடியாக டி.வி. திரையில் 'ஸ்பிரே' செய்யாமல், மென்மையான துணியில் 'ஸ்பிரே' செய்து, பின்னர் அதைக் கொண்டு டி.வி. திரையை துடைத்துச் சுத்தப்படுத்த வேண்டும்.
* எல்.இ.டி., ஓ.எல்.இ.டி, பிளாஸ்மா டி.வி. திரைகளை சேதப்படுத்திவிடாமலும், கைரே கைகள் படாமலும் தூசி, அழுக்கைச் சுத்தம் செய்ய மைக்ரோ பைபர் துணியைப் பயன்படுத்தலாம்.
* டி.வி. திரையை சுத்தப்படுத்தியவுடன் சிறி துநேரம் விட்டு அதன் பிறகு 'ஆன்' செய்வது, டி.வி. பழுதாகாமல் தவிர்க்க உதவும்.
* ஏ.சி. பில்டரை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை, சான்றிதழ் பெற்ற டெக்னீசியன் மூலம் ஏ.சி.யை சர்வீஸ் செய்வதோடு, ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்ற ஸ்டெபிலைசர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* பல நாட்களாக இயக்கத்தில் இல்லாத ஏ.சி.யை சர்வீஸ் செய்யாமல் 'ஆன்' செய்யக் கூடாது.
* குளிர்சாதன பெட்டி முழுமையாக குளிரூட்ட, வெளிப்புறம், உட்புறம் உள்ள கதவின் கேஸ்கட்டை மென்மையான துணியால் துடைத்து சுத்தப்படுத்த வேண்டும். சுவரில் இருந்து பிரிட்ஜை சற்றுத் தள்ளிவைக்கவும் வேண்டும்.
* தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்களை மின் இணைப்பிலிருந்து துண்டித்து விடுவதோடு, பழுதான மின் சாதனங்கள் இயக்குவதைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.
* வோல்டேஜ் பிரச்சினை இருக்கும்போது வாஷிங் மெஷின் இயக்குவதை தவிர்க்க வேண்டும்.
* மைக்ரோவேவ் ஓவனில் சூடு செய்யும் போது அந்தந்த உணவுப்பொருளுக்கு ஏற்ற பாத்திரத்தை உபயோகிப்பதோடு, கெட்டியான கண்ணாடி கிண்ணம், செராமிக் பாத்தி ரங்களை உபயோகிக்கலாம்.
* வாட்டர் ஹீட்டரின் உள்பகுதியும் வெளிப்பகுதியும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலால் ஆனதாக பார்த்து வாங்கினால் பராமரிப்புச் செலவு மிச்சமாகும்.
* அலுமினியம் மற்றும் பைபர் கிளாசால் ஆன பிளேடுகள் பொருத்திய மின்விசிறியை வாங்கலாம். காற்றின் அளவு நன்றாக இருக்க மூன்று பிளேடுகள் கொண்ட மின்வி சிறியை வாங்குவது சிறந்தது.
* மின்விசிறியையும் எக்சாஸ்ட் பேனையும் ஒரே அறையில் பொருத்தும்போது, மின்விசி றியை விட அதிக உயரத்தில் எக்சாஸ்ட் பேனை பொருத்துவது அவசியம் ஆகும்.
* மிக்சியில் அரைக்கும் பொருட்கள் பிளேடு இடைவெளிகளில் தங்காமல் இருக்க, அரைத்து முடித்தவுடன் தண்ணீர் விட்டு ஒரு சுற்று ஓட விட வேண்டும்.
* கிரைண்டரில் அரவை நேரத்தைக் குறைக்க பொருட்களை 5 மணி நேரம் ஊற வைப்பதோடு, கிரைண்டர் உடன் பொருத்தப் பட்ட பெல்ட் தளர்வடையும்போது மோட்டாரை நகர்த்தி பெல்ட்டை சரிசெய்யலாம்.
* மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டால், தண்ணீரை ஊற்றித் தீயை அணைக்க முயற் சிக்கக் கூடாது.
* மின் சாதனங்களை குறிப்பிட்ட இடைவெளியில் முறையாக பராமரித்து வந்தால், பழுது பார்க்கும் செலவு மிச்சப்படுவதோடு, அவற் றின் செயல்திறனும், ஆயுட்காலமும் நீட்டிக்கப்படும்.

No comments:
Post a Comment