வங்கியில் பணி புரிய 350 பணியிடங்களுக்கு ரூ 85,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!
சென்ட்ரல் வங்கியில் சிறப்பு பிரிவில் உள்ள அந்நிய செலாவணி அதிகாரி மற்றும் மார்க்கெட்டிங் அதிகாரி ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 350 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் https://centralbank.bank.in/ என்ற இணையதளத்தில் பிப்ரவரி 3-ம் தேதி வரை பெறப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் வங்கியில் முக்கிய பதவிகளில் உள்ள 350 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடங்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி அதிகாரி மற்றும் மார்க்கெட்டிங் அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பதவிகளுக்கான தகுதிகள், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, வகுப்பு பிரிவு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
அமைப்பின் பெயர்: சென்ட்ரல் வங்கி
பதவியின் பெயர்:
அந்நிய செலாவணி அதிகாரி மற்றும் மார்க்கெட்டிங் அதிகாரி
காலிப்பணியிடங்கள் :350
இணையதளம்
https://centralbank.bank.in/
பணியின் விவரங்கள்
பதவியின் பெயர்
அந்நிய செலாவணி அதிகாரி- 50
மார்க்கெட்டிங் அதிகாரி- 300
மொத்தம்- 350
இப்பதவிக்கான வயது வரம்பு என்ன?
இப்பணிக்கு 01.01.2026 தேதியின்படி, குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபடியாக 35 வயது வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்கெட்டிங் அதிகாரி பதவிக்கு குறைந்தபட்சம் 22 முதல் 30 வயது வரை இருக்கலாம். எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினர்களுக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 வருடங்கள் தளர்வு வழங்கப்படுகின்றன.
கல்வித்தகுதி
அந்நிய செலாவணி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் AICTE/ UGC ஆகியவற்றினால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். CFA/CA, MBA ஆகியவற்றை முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். IIBF-யிடம் இருந்து அந்நிய செலாவணி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். CAIIB/ IIBF/ CDCS/ CITF/ NISM ஆகியவற்றில் இருந்து சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மார்க்கெட்டிங் அதிகாரி பதவிக்கு பட்டப்படிப்புடன் 2 ஆண்டு முதுகலை எம்பிஏ அல்லது பிஜி டிப்ளமோ ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
அந்நிய செலாவணி அதிகாரி பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.85,920 முதல் அதிகபடியாக ரூ.1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதே போன்று, மார்க்கெட்டிங் அதிகாரி பதவிக்கு ரூ.48,480 முதல் ரூ. 85,920 வரை வழங்கபடும்.
தேர்வு செய்யப்படும் முறை
சென்ட்ரல் வங்கியில் உள்ள எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மொத்தம் 100 கேள்விகளுடன் 100 மதிபெண்களுக்கு நடைபெறும். இதற்கு 60 நிமிடங்கள் வழங்கப்படும். துறை சார்ந்த கேள்விகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்குறி வகையில் (objective test) நடைபெறும் இத்தேர்வில் தவறான பதிலுக்கு நெகட்டிங் மார்க் கிடையாது.
தேசிய அளவில் பல்வேறு இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும்போது தேர்வர்கள் விரும்பும் தேர்வு மையத்தை தேர்வு செய்துகொள்ளலாம். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். பொதுப்பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். இதில் தேர்வாகும் நபர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். இரண்டு கட்டத் தேர்வு முறையில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் இளைஞர்கள் தங்களின் சுயவிவரங்களுடன் https://centralbank.bank.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும்போது அதற்கான கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகல், பெண்கள் விண்ணப்பதார்கள் ரூ.175 செலுத்தினால் போதுமானது.
முக்கிய நாட்கள்
விண்ணப்பம் தொடக்கம்: 20.01.2026
விண்ணப்பிக்க கடைசி நாள்:
03.02.2026
எழுத்துத் தேர்வு
பிப்ரவரி/ மார்ச் 2026
நேர்முகத் தேர்வு
மார்ச்/ ஏப்ரல் 2026
வங்கித்துறையில் அதிக சம்பளத்துடன் பணி வாய்ப்பைப் பெற விரும்புகிறவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும். உரிய ஆவணங்களுடன் மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பிப்ரவரி 3-ம் தேதிக்குள் விண்ணப்பித்து கட்டணத்தை செலுத்த வேண்டும்.

No comments:
Post a Comment