கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 14,967 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, December 7, 2025

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 14,967 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 14,967 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு


மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் (KVS) மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளி (NVS) இயங்குகிறது.


 இந்தியா முழுவதும் 25 மண்டலங்களாக கொண்டு 1,288 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுகிறது.


 நவோதயா வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் 653 பள்ளிகள் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் நவோதயா வித்யாலயா பள்ளிகள் கிடையாது.


 சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இப்பள்ளிகள் செயல்படுகிறது. இந்நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் 14,967 காலிப்பணியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, டிசம்பர் 4 வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.


 தொடர்ந்து, இதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், முதல் கட்டத் தேர்வு 2026 ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தாண்டில் மத்திய அரசின் கீழ் கல்வித்துறையின் பணி வாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும்.


காலிப்பணியிடங்களின் முழு விவரம்


பதவியின் பெயர்

 காலிப்பணியிடங்கள்



உதவி ஆணையர் -17 


தலைமை ஆசிரியர்- 227 


உதவி தலைமை ஆசிரியர்- 58 


முதுகலை பட்டதாரி ஆசிரியர்- 2,996


பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்- 6,215 


நூலகர் - 147 


தொடக்கக்கல்வி ஆசிரியர் - 3,365 


ஆசிரியர் அல்லாத பணியிடங்கள்  


நிர்வாக அதிகாரி - 12


நிதி அதிகாரி- 05 


உதவி பொறியாளர்- 02 


உதவி பிரிவு அதிகாரி -74 


ஜூனியர் மொழிப்பெயர்பாளர்- 08 


சீனியர் செயலக உதவியாளர் -280 


ஜூனியர் செயலக உதவியாளர் -714 


ஸ்னோகிராப்பர் கிரேடு-I -03 


ஸ்னோகிராப்பர் கிரேடு - II -57 


ஜூனியர் செயலக உதவியாளர் (HQ/RO Cadre) -46 


ஜூனியர் செயலக உதவியாளர் (JNV Cadre) -552 


லேப் உதவியாளர்- 165 


பல்நோக்கு ஊழியர்- 24 


மொத்தம் - 14,967


கல்வித்தகுதி


உதவி ஆணையர் பதவிக்கு முதுகலை பட்டத்துடன், B.Ed மற்றும் தலைமை ஆசிரியராக 3 ஆண்டு அனுபவம் தேவை.


தலைமை ஆசிரியர் பதவிக்கு முதுகலை பட்டப்படிப்புடன் B.Ed மற்றும் தலைமை ஆசிரியர், துணை தலைமை ஆசிரியராக அனுபவம் தேவை அல்லது 12 வருட ஆசிரியர் பணி.


உதவி தலைமை ஆசிரியர் பதவிக்கு முதுகலை பட்டப்படிப்புடன் B.Ed முடித்திருக்க வேண்டும் மற்றும் ஆசிரியராக 6 வருடம் அனுபவம் தேவை.


முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு அந்தந்த பாடங்களில் முதுகலை பட்டப்படிப்புடன் B.Ed. இந்தி மற்றும் ஆங்கில வழி கல்வியில் பயிற்றுவிக்கும் திறன் தேவை. ஆசிரியர் அனுபவம் தேவை. கணினி அறிவியல் மற்றும் உடற்கல்விக்கு மாறுப்படும்.


பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அந்தந்த பாடத்தில் இளங்கலை டிகிரியுடன், B.Ed தேவை. முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். CTET தேர்வில் தகுதிப் பெற்றிருக்க வேண்டும். சிறப்பு கல்வியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.


நூலகர் பதவிக்கு நூலக அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் அனுபவம் தேவை.


தொடக்கக்கல்வி ஆசிரியர் பதவிக்கு 12-ம் வகுப்பிற்கு பின்னர் டிப்ளமோ அல்லது B.El.Ed ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும். CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிறப்பு கல்வி படித்தவர்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.


ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு அந்தந்த துறைக்கான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.


பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு மட்டும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.


சம்பள விவரம்


உதவி ஆணையர், தலைமை ஆசிரியர் பதவிகளுக்கு ரூ.78,800 முதல் 2,09,200 வரை வழங்கப்படும்.


உதவி தலைமை ஆசிரியர் பதவிக்கு ரூ.56,100 முதல் 1,77,500 வரை வழங்கப்படும்.


முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு ரூ.47,600 முதல் 1,51,100 வரை சம்பளம் வழங்கப்படும்.


பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு ரூ.44,900 - 1,42,100 வரை சம்பளம் வழங்கப்படும்.


தொடக்கக்கல்வி ஆசிரியர் பதவிக்கு ரூ.35,400 முதல் 1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.


நூலகர் பதவிக்கு ரூ.44,900 - 1,42,100 வரை சம்பளம் வழங்கப்படும்.


நிர்வாக அதிகாரி பதவிக்கு ரூ.56,100 - 1,77,500


நிதி அதிகாரி மற்றும் உதவி பொறியாளர் பதவிகளுக்கு ரூ.44,900 - 1,42,400


உதவி பிரிவு அதிகாரி மற்றும் ஜூனியர் மொழிப்பெயர்பாளர் பதவிகளுக்கு ரூ.35,400 - 1,12,400


சீனியர் செயலக உதவியாளர் பதவிக்கு ரூ.25,500 - 81,100


ஜூனியர் செயலக உதவியாளர் பதவிக்கு ரூ.19,900 - 63,200


ஸ்னோகிராப்பர் கிரேடு-I பதவிக்கு ரூ.35,400 - 1,12,400


ஸ்னோகிராப்பர் கிரேடு - II பதவிக்கு ரூ.25,500 - 81,100


லேப் உதவியாளர் மற்றும் பல்நோக்கு ஊழியர் பதவிகளுக்கு ரூ.18,000 - 56,900


தேர்வு செய்யப்படும் முறை


இப்பணியிடங்களுக்கு 2 கட்ட தேர்வு முறை மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்விற்கு 85 சதவீத மதிப்பெண்கள் மற்றும் நேர்காணலுக்கு 15 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும். ஸ்னோகிராப்பர் மற்றும் ஜூனியர் செயலக உதவியாளர் பதவிக்கு திறன் தேர்வு உண்டு.


விண்ணப்பிக்கும் முறை


மத்திய அரசு பள்ளிகளில் உள்ள பணி வாய்ப்பிற்கு https://kvsangathan.nic.in/en/interview-notice/ அல்லது https://www.cbse.gov.in/ அல்லது https://navodaya.gov.in/ ஆகிய ஏதேனும் ஒரு இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.


இதற்கு தேர்வு கட்டணம் பதவிக்கு ஏற்ப ரூ.1200 முதல் 2,300 வரையும், செயலாக்க கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். CBSE KVS/NVS வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்க்க


https://cdnbbsr.s3waas.gov.in/s32d2ca7eedf739ef4c3800713ec482e1a/uploads/2025/11/2025111348.pdf


முக்கிய நாட்கள்



விண்ணப்பம் தொடக்கம்


 14.11.2025


விண்ணப்பிக்க கடைசி நாள்


 11.12.2025



தேர்வு தேதி 


ஜனவரி 10 மற்றும் 11


நேர்காணல்

 பின்னர் அறிவிக்கப்படும்.


பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.


தேர்விற்கான அட்டவணை, தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட நகரம் மற்றும் அட்மிட் கார்டு ஆகியவை பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment