அறக்கட்டளை பள்ளியில் பணி பணிபுரிய பல்வேறு பாடங்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை
சென்னை துறைமுக ஆணையகத்தின் கீழ் தொண்டியார்பேட்டையில் சென்னை துறைமுகம் மற்றும் கப்பல்துறை கல்வி அறக்கட்டளை மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நேரடி நேர்காணல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை துறைமுக ஆணையகத்தின் அறக்கட்டளையின் கீழ் சென்னை தொண்டியார்பேட்டையில் பள்ளி செயல்படுகிறது. இங்கு பொருளாதாரம், கணக்கியல், கணிதம் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் கணக்காளர் பதவிகளுக்கு வரும் 22-ம் தேதி நேரடி நேர்காணல் நடைபெறவுள்ளது. இதற்கு தகுதியுள்ளவர்கள் நேரடியாக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுக அறக்கட்டளை மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் கணக்காளர் பதவிக்கு ஆட்கள் ஒப்பந்த முறையில் 2 ஆண்டுகளுக்கு நிரப்பப்படுகிறது.
பணியின் விவரங்கள்
பதவியின் பெயர்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் (பொருளாதாரம்) -1
முதுகலை பட்டதாரி ஆசிரியர் (கணக்கியல்) -1
இடைநிலை பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) -2
இசை ஆசிரியர் (பகுதி நேரம்) -1
கணக்காளர் -1
மொத்தம்- 6
ஆசிரியர் தகுதிகள்
பொருளாதாரம் மற்றும் கணக்கியல் பாடங்களுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு அந்த பாடத்தில் முதுகலை பட்டப்படிப்புடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதார்கள் அதிகபடியாக 45 வயதைக் கடந்திருக்கக்கூடாது.
கணிதம் பாடத்திற்கான இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்புடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். மேலும் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இசை ஆசிரியர் பதவிக்கு இசையில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கணக்காளர் பதவிக்கு வணிகம், கணக்கியல் ஆகியவற்றில் எம்.காம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் .டாலி, அக்கௌன்ட்ஸ் ஆகியவற்றில் அனுபவம் தேவை. அதிகப்படியாக 45 வயது வரை இருக்கலாம்.
மேலும், இப்பணியிடங்களுக்கு 2 ஆண்டுகள் குறைந்தபட்சம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இசை ஆசிரியர் பதவிக்கு மட்டும் புதிதாக மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தேர்வுச் செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.
இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு மாதம் ரூ.25,000 வழங்கப்படும்.
இசை ஆசிரியர் பதவி நேர அடிப்படையில் நிரப்பப்படுவதால், மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.
கணக்காளர் பதவிக்கு மாதம் ரூ.40,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு நேரடியாகவே சென்று பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் நபர்களில் இருந்து தகுதியானவர்களுக்கு அன்றே நேர்காணல் நடைபெறும். நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த முறையில் 2 ஆண்டு காலத்திற்கு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
சென்னையில் உள்ள இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் மற்றும் கணக்காளர்கள் சென்னையில் ராஜாஜி சாலையில் அமைந்துள்ள சென்னை துறைமுக ஆணைய அலுவலகத்திற்கு நேரில் சென்று அக்டோபர் 22-ம் தேதி காலை விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்தில் அனைத்து சான்றிதழ்களின் நகல் மற்றும் இதர விவரங்களை பூர்த்து செய்து வழங்க வேண்டும். குறிப்பாக வயது, கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தை குறிக்கும் ஆவணங்கள் அவசியமாகும். அதிலிருந்து தகுதியானவர்கள் தெரிவுச் செய்யப்பட்டு பிற்பகல் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
நாள் : 22.10.2025
விண்ணப்பப் பதிவு நேரம் : காலை 10 மணி முதல் 11 மணி வரை
தெரிவு செய்யப்பட்டவர்கள் அறிவிப்பு : பிற்பகல் 1 மணி
நேர்காணல் :
பிற்பகல் 3 மணி முதல்
இடம் : புதிய கான்பிரண்ஸ் ஹால்,
நூற்றாண்டு கட்டிடம்,
சென்னை துறைமுக ஆணையம்,
எண்.1, ராஜாஜி சாலை,
சென்னை - 600 001.
இதற்கான விண்ணப்பப்படிவத்தை https://www.chennaiport.gov.in/careers என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நேர்காணலுக்கு செல்லும் நபர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அறிவிப்பினைப் பார்க்க
https://chennaiport.gov.in/api/static/default/career/Walk-in%20Interview%20for%20teachers%20Tondiarpet151025.pdf

No comments:
Post a Comment