தமிழ்நாடு ஊராட்சித் துறையில் உள்ள 300 மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, September 28, 2025

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் உள்ள 300 மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளத்தில் வேலை வாய்ப்பு..!

 தமிழ்நாடு ஊராட்சித் துறையில் உள்ள 300 மேற்பட்ட  காலிப்பணியிடங்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளத்தில் வேலை வாய்ப்பு..!


தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. 70 ஈர்ப்பு ஓட்டுநர், 33 பதிவரை எழுத்தர், 151 அலுவலக உதவியாளர், 83 இரவு காவலர் 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஆன்லைன் மூலம் செப்டம்பர் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி ஆகியவை அடிப்படை கல்வி தகுதிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் மாவட்ட அளவில் தொடங்கி, யூனியன் அளவில் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.


தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஏராளமான காலி பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் விண்ணப்பத்தை அளிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.


ஊரக வளர்ச்சித் துறை


ஊராட்சி ஒன்றிய அளவில் ஈர்ப்பு ஓட்டுனர், அலுவலக உதவியாளர், பதிவரை எழுத்தர், இரவு காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பம் பெறப்படுகிறது,


 தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள், எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


 அதிகபட்சம் 71 900 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் இந்த பதவிகள் நிரப்பப்படுவதால்


 https://www.tnrd.tn.gov.in/ 


என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலி பணியிட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.


வயது வரம்பு விவரம்


அனைத்து பதவிகளுக்கும் 01.07.2025 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர் ஆகிய பதவிகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக பொது பிரிவினர் 32 வரையும், பிசி/எம்பிசி பிரிவினர் 34 வரையும் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37 வயது வரையும் இருக்கலாம். ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு 18 - 32 வரையும், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 34 வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 42 வரையும் இருக்கலாம்.


அடிப்படை கல்வித் தகுதி


அலுவலக உதவியாளர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும். பதிவறை எழுத்தர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவு காவலர் பதவிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். ஈப்பு காவலர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்


அலுவலக உதவியாளர் பதவிக்கு நிலை 1 கீழ் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை மாத சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதிவறை எழுத்தர் பதவிக்கு மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை சம்பளம் வழங்கப்படும். இரவு காவலர் பதவிக்கு நிலை 1 கீழ் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும். ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு நிலை 8 கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.


மாவட்ட விவரங்கள்


அரியலூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கருர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பணியிடங்கள் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படுகிறது. காலிப்பணியிட விபரங்களை


 https://tnrd.tn.gov.in/project/recruitment/Advertisement/advertisement_display.php 


என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.


தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள 300 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30-ம் தேதியே கடைசி நாள் ஆகும். இந்நிலையில், ஆன்லைன் வழியாக படிப்படியாக விண்ணப்பிக்க தேவையான விவரங்களை இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.


தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஒன்றிய அளவில் ஈப்பு ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 385 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு செப்டம்பர் தொடக்கமே வெளியாகி, https://www.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் பெறப்பட தொடங்கியது. இப்பதவிகளுக்கு தமிழ் தெரிந்தவர்கள் முதல் 8, 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதால் பலர் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வந்தனர்.


இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக எளிய முறையில் 5 நிமிடங்களில் விண்ணப்பிக்கலாம். இதுவரை விண்ணப்பிக்க இயலாதவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிப்பது எப்படி என்பதை அறிந்துகொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க தயாராக வைத்துகொள்ள வேண்டியவை


விண்ணப்பதாரின் புகைப்படம்


விண்ணப்பதாரின் கையொப்பம்


வகுப்பு சான்றிதழ்


குடும்ப அட்டை


அனுபவம் சான்றிதழின் நகல்


ஓட்டுநர் உரிமம் (தேவையிருப்பின்)


கல்வித்தகுதி சான்றிதழ்

விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 வங்கி கணக்கில் வைத்துகொள்ளவும். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் ரூ.50 செலுத்தினால் போதும்.


ஊராட்சித்துறை பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?


படி 1 

 https://www.tnrd.tn.gov.in/ 


என்ற அதிகாரப்பூர்வ துறையின் இணையதளத்திற்கு செல்லவும்.


படி 2 


முகப்பு பக்கத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு மற்றும் இணைப்பு இடம்பெற்று இருக்கும்.


படி 3 


அதில் முதலில் அறிவிப்பை படிக்கவும். உரிய கல்வித்தகுதி உடையவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


படி 4 :


 தகுதியுள்ளவர்கள் பதவிகளுக்கான இணைப்பை கிளிக் செய்யவும். ஒரு புதிய பக்கம் திறக்கும்.


படி 5 


அதில் நீங்கள் எந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்யவும்.


படி 6 


 உதாரணத்திற்கு நீங்கள் ஈப்பு ஓட்டுநர் பதவியை தேர்வு செய்கின்றீர்கள் என்றால், அதற்கான இடத்தில் கொடுக்கப்பட்டுள்ள “விண்ணப்பிக்க” என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.


படி 7 


தொடர்ந்து வேறு பக்கம் திறக்கும். அதில் வகுப்பு, பாலினம், மாவட்ட, வட்டாரம், பெயர், தந்தை/ பாதுகாவலர் பெயர், கல்வித்தகுதி, மதம், உட்பிரிவின் பெயர், குடும்ப அட்டை எண், பிறந்த தேதி, சொந்த மாவட்டம், கைப்பேசி எண், இமெயில் முகவரி, முகவரி, ஓட்டுநர் உரிமம் எண், அனுபவம் ஆகியவற்றை வழங்கவும்.


படி 8 : 


மேலும், தேவையான ஆவணங்களை அந்தந்த இடத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


படி 9 


இறுதியாக கீழே உறுதி மொழி வழங்கப்பட்டு இருக்கும். அதனை படித்து டிக் செய்யவும்.


படி 10 


Captcha பதிவிட்டு, Save and Next என்பதை கிளிக் செய்யவும். ஒரு பக்கம் திறக்கும். அதில் உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஒடிபி-யை பதிவிட்டு சரிபார்க்கவும்.


படி 11 : 


நிரப்பிய படிவம் காட்சிபடுத்தப்படும். அதில் விவரங்களை சரிபார்த்து Proceed to Pay என்பதை கிளிக் செய்யவும். தவறாக இருந்தால் Edit செய்து சரிசெய்துகொள்ளலாம்.


படி 12 


கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, யுபிஐ, நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலம் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தலாம். கட்டணம் செலுத்தியது உறுதி செய்யும் வரை பின் வர வேண்டாம்.


படி 13 


கட்டணம் செலுத்தியது Failed என்று வந்தால் மீண்டும் Retry கொடுத்து மீண்டும் முயற்சிக்கலாம்.


படி 14 


கட்டணம் செலுத்திய பின்னர், அதற்கான ரசீது பதிவிறக்கம் செய்யயும் பக்கம் திறக்கும். அதில் விண்ணப்பப் படிவம் மற்றும் கட்டண ரசீதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


இரவு காவலர் பதவிக்கு எழுதப் படிக்க தெரிந்தால் போதும், ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிக்கு 8ஆம் வகுப்பு மற்றும் எழுத்தர் பதவிக்கு 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதார்கள் ஒரு மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பதவிக்கு ஒரே ஒரு இணைய ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.


ஆன்லைன் விண்ணப்பத்தில் தவறான தகவல் அளிக்கக்கூடாது. போலி சான்றிதழ் அல்லது தகவல் கண்டறியப்பட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment