அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு மற்றும் விடுமுறை எப்போது?
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதி தொடங்கி 25-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.
6-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
பள்ளி கல்வியாண்டு நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ள தேதியைவிட முன்கூட்டியே தேர்வு தொடங்கினாலும், ஏற்கனவே செப்டம்பர் 26-ந்தேதிக்குள் தேர்வு முடியும் என தெரிவித்தபடியே நிறைவு பெறுகிறது.
அந்தவகையில், காலாண்டு தேர்வு விடுமுறையும், கல்வியாண்டு நாட்காட்டியில் குறிப்பிட்டபடி, அடுத்த மாதம் 27-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.

No comments:
Post a Comment