கூட்டுறவுச் சங்கங்களில் 377 காலிப்பணியிடங்களுக்கு ரூ.32,020 முதல் ரூ.96,210 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, August 10, 2025

கூட்டுறவுச் சங்கங்களில் 377 காலிப்பணியிடங்களுக்கு ரூ.32,020 முதல் ரூ.96,210 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 கூட்டுறவுச் சங்கங்களில் 377 காலிப்பணியிடங்களுக்கு ரூ.32,020 முதல் ரூ.96,210 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


தமிழ்நாடு தலைமைக் கூட்டுறவு வங்கி


 காலிப்பணியிடங்கள்-211


 ஊதியம்:ரூ.32,020 முதல் ரூ.96,210


தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேலாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி


 காலிப்பணியிடங்கள் -75


 ஊதியம்:ரூ.21,930 முதல் ரூ.85,000


தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம்


 காலிப்பணியிடங்கள்- 65 


ஊதியம்:ரூ.21,500 முதல் 87,500



தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களின் இணையம் 


காலிப்பணியிடங்கள் -2 


ஊதியம்:ரூ,11,900 முதல் ரூ.32,450



தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம்


 காலிப்பணியிடங்கள்:14


 ஊதியம்:ரூ.19,500 முதல் ரூ.62,000


தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம்


 காலிப்பணியிடங்கள் -10 


ஊதியம்:ரூ.18,000 முதல் ரூ.67,500


மொத்தம் -377


இவை பொதுப் பிரிவு - 116


 பிற்படுத்தப்பட்டோர் - 99


 பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்) 13


 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 74


 ஆதிதிராவிடர் - 56


 ஆதிதிராவிடர் (அருந்ததியர்) - 12


 பழங்குடியினர் - 4


 பின்னடைவு காலிப்பணியிடம் - 3


 என நிரப்பப்படுகிறது.


இதில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தில் மட்டும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.


வயது வரம்பு


சென்னையில் உள்ள தலைமை கூட்டுறவு சங்கங்களில் உள்ள உதவியாளர் பணிக்கு ஜூலை 1-ம் தேதி வரை 18 வயது அடைந்திருக்க வேண்டும்.


 விண்ணப்பதார்கள் 2007 ஜூலை 1 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும். 


இதர வகுப்பினர் பிரிவு 32 வயது வரையும், இதர வகுப்பினைச் சார்ந்த முன்னாள் ராணுவத்தினர் 50 வயது வரையும், இதர வகுப்பினை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் 42 வயது வரை இருக்கலாம். 


இதர பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பு கிடையாது.


கல்வித்தகுதி


இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு பெறாத 15 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.


கூட்டுறவு பயிற்சி என்பது தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் மற்றும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும் டிப்ளமோ படிப்பு ஆகும். கூட்டுறவு சாரந்த பாடப்பிரிவில் பட்டப்படிப்பு பெற்றவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


தேர்வு செய்யப்படும் முறை


தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.


 இரண்டிலும் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, இடஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வின் மூலம் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.


 இதற்கான தேர்வு அக்டோபர் 5-ம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை


கூட்டுறவு சங்கம் மற்றும் வங்கிகளில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்

 https://www.tncoopsrb.in/index.php


 என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.


 ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ஆதாரவற்ற கணவரை இழந்தவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.


அறிவிப்பை பார்க்க


https://cooperativercs.s3.ap-south-1.amazonaws.com/Asst_2025/51_Notification_1.pdf


முக்கிய நாட்கள்


விண்ணப்பிக்க கடைசி நாள்


 29.08.2025 


மாலை 5.45 மணி வரை


எழுத்துத் தேர்வு


 05.10.2025 


காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை


தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் பணிபுரிய விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொண்டு ஆன்லைன் வழியாக உடனே விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment