பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் தக்காளியின் மருத்துவ பயன்கள்..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, July 13, 2025

பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் தக்காளியின் மருத்துவ பயன்கள்..!

 பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் தக்காளியின் மருத்துவ பயன்கள்..!


தக்காளியில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன.


அவை பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்க உதவுகின்றன. குறிப்பாக, தக்காளி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கவும், தோல் நோய்களைக் குணப்படுத்தவும், மலச்சிக்கலைப் போக்கவும் உதவுகிறது.


*பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்கிறது.


*தக்காளிப் பழங்கள் வலுவான எலும்புகளையும் பற்களை பெறுவதற்கும் உதவுகின்றன. தக்காளி பழத்தில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை நமது எலும்பை உறுதியாகவும் திடமாகவும் மாற்றுகின்றன.


*நூறு கிராம் தக்காளிப் பழத்தில் இருபது கிராம் மட்டுமே கலோரி இருப்பதால் எத்தனைப் பழங்கள் சாப்பிட்டாலும் உடல் பருமன் ஆகாது.


*நன்றாகப் பழுத்த தக்காளிப் பழத்தை சாறுபிழிந்து அருந்தினால் ரத்தம் சுத்திகரிக்கும். ரத்த சோகை குணமாகும்.


* சிறுநீரகத்தில் படிந்துள்ள கழிவுப் பொருட்கள் அனைத்தையும் வெளியேற்றும்.


*பழுத்தப் பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் சி அதிகமாக உள்ளது.


*சிறுநீர் எரிச்சல், மேகநோய், உடலில் வீக்கம். உடல் பருமன், நீரிழிவு, குடல் நோய்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றையும் தக்காளிச் சாறு குணமாக்கும்.


* இதயநோய் உள்ளவர்கள் தினமும் ஐந்து பழங்களைச் சாறு பிழிந்து அருந்திவந்தால் நல்ல குணம் கிடைக்கும். நாவறட்சியும் அகலும், உடலும் மினுமினுக்கும்.


*தக்காளிப் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் ஏ முதலியவை அதிக அளவில் உள்ளன. அதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன.


*தக்காளிப் பழச்சாறு நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.


*இரவில் கண்பார்வை தெளிவாகத் தெரியாமல் இருப்பவர்கள் தக்காளிச் பழச்சாறு சாப்பிடுவதால் கண் பார்வை மேம்படுகிறது.


*மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், அஜீரணக்கோளாறு, வாய்வுத் தொல்லை, நெஞ்செரிச்சல் முதலிய நோய்கள் குணமாக, ஒரு டம்ளர் தக்காளிச் சாறுடன் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தொடர்ந்து பருகி வந்தால் குணம் கிடைக்கும்.


*காசநோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய்களையும் குணப்படுத்துகிறது. உடலுக்கு சக்தியையும் கொடுக்கும்.

No comments:

Post a Comment