தமிழ்நாட்டில் 645 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ அறிவிப்பு வெளியீடு - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, July 17, 2025

தமிழ்நாட்டில் 645 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ அறிவிப்பு வெளியீடு

 தமிழ்நாட்டில்  645 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ அறிவிப்பு வெளியீடு


தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படுகிறது. இந்நிலையில், 2025-ம் ஆண்டு அட்டவணையில் தெரிவித்தப்படி, ஜூலை 15-ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அரசு பணிக்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிக காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 645 காலிப்பணியிடங்களுக்கு மட்டும் வெளியாகியுள்ளது. இதற்கான தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு மொத்தம் 645 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. குரூப் 2 பதவிகளில் 50 இடங்களும், குரூப் 2ஏ பதவிகளில் 595 இடங்களும் இடம்பெற்றுள்ளன.


காலிப்பணியிடங்கள் விவரம்


குரூப் 2 50


குரூப் 2ஏ 595


மொத்தம் 645


குருப் 2 பதவிகள் என்னென்ன?


உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், தனிப்பிரிவு உதவியாளர், உதவிப் பிரிவு அலுவலர், வனவர் ஆகிய பணியிடங்கள் குரூப் 2 கீழ் நிரப்பப்படுகிறது.


குரூப் 2ஏ பதவிகள் என்னென்ன?


குரூப் 2ஏ கீழ் முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், தமிழ்நாடு அமைச்சுப் பணியில் உதவியாளர், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர், மாநில தேர்தல் ஆணையம் உதவியாளர், சட்டமன்ற பேரவை கீழ்நிலை செயலிட எழுத்தர் உள்ளிட்ட பதவிகள் இடம்பெறுகின்றன.


வயது வரம்பு


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பதவிகளுக்கு 01.07.2025 தேதியின்படி, குறைந்தபட்ச வயது வரம்பாக நன்னடத்தை அலுவலர் பதவிக்கு 22, 26, வனவர் பதவிக்கு 21, சார் பதிவாளர் பதவிக்கு 20 எனவும், இதர பதவிகளுக்கு 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வனவர் பதவிக்கு வயது உச்ச வரம்பு 37 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர பதவிகளுக்கு வயது உச்ச வரம்பு கிடையாது.


குரூப் 2ஏ பதவிகளில் செயல் அலுவலர் பதவிக்கு மட்டும் குறைந்தபட்ச வயது 25 ஆக உள்ளது. இதர பதவிகளுக்கு 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு கிடையாது.


கல்வித்தகுதி


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பெரும்பாலான பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் போதுமானது.


சம்பள விவரம்


தமிழ்நாடு அரசு சம்பள விதிமுறைகளில் நிலை 9 முதல் நிலை 18 வரை சம்பள நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யப்படும் முறை


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு கடந்த ஆண்டு முதல் நேர்காணல் கிடையாது.முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்ட தேர்வு நடத்தப்படும்.


குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு முதல்நிலை தேர்வு நடத்தப்படும். இது தகுதி தேர்வு மட்டுமே. இதில் தகுதி பெறுபவர்கள் முதன்மைத் தேர்விற்கு தகுதி அடைவார்கள்.


முதன்மைத் தேர்வு, குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்படும். இரண்டிற்குமான புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, கலந்தாய்வின் மூலம் பணி நியமனம் வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் https://tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். வகுப்பு வாரியாக கட்டண தளர்வு உள்ளது. அதனை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.


தேர்வர்கள் https://apply.tnpscexams.in/ என்ற இணையதளத்தில் OTR பதிவு செய்து, பின்னர் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே OTR பதிவு செய்தவர்கள், நேரடியாக தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.


இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜூலை 15 தொடங்கிய நிலையில், வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் திருத்தம் செய்ய 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. இதற்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும். முதன்மைத் தேர்வு தேதி, முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் அறிவிக்கப்படும்.


முக்கிய நாட்கள்


விண்ணப்பம் தொடக்கம் 15.07.2025


விண்ணப்பிக்க கடைசி நாள்


 13.08.2025


விண்ணப்பம் திருத்தம் கால அவகாசம்


 18.08.2025 முதல் 20.08.2025 வரை


முதல்நிலை தேர்வு


 28.09.2025 காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை


தேர்வு தேதி


 பின்னர் அறிவிக்கப்படும்.


அறிவிப்பினைப் பார்க்க 


https://tnpsc.gov.in/Document/tamil/GRP2_11_2025_TAMIL.pdf

No comments:

Post a Comment