ரயில்வே நிறுவனத்தில் 24 காலிப்பணியிடங்களுக்கு ரூ 40,000 முதல் ரூ 2,00, 000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, July 2, 2025

ரயில்வே நிறுவனத்தில் 24 காலிப்பணியிடங்களுக்கு ரூ 40,000 முதல் ரூ 2,00, 000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 ரயில்வே நிறுவனத்தில் 24 காலிப்பணியிடங்களுக்கு  ரூ 40,000 முதல் ரூ 2,00, 000  வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் (RITES) நிறுவனத்தில் உள்ள முக்கிய பணியிடங்களை உடனடி தேவையை பொருத்து நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெபியூட்டி ஜெனரல் மேனேஜர், உதவி மேனேஜர் ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.


ரயில்வே கீழ் இயங்கும் முக்கிய நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.


டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் மற்றும் உதவி மேனேஜர் ஆகிய பதவிகளுக்கான 18 காலிப்பணியிடங்கள் Regular Basis முறையிலும், தென் மண்டலத்திற்கான தள மதிப்பீட்டாளர் பதவியில் உள்ள 6 காலிப்பணியிடங்கள் ஒப்பந்த முறையிலும் நிரப்பப்பட உள்ளது.


பணியின் விவரங்கள்


பதவியின் பெயர்

 காலிப்பணியிடங்கள்


DGM- 4


உதவி மேனேஜர் -14


மொத்தம் -18


தென் மண்டலம் 


தள மதிப்பீட்டாளர்

 (Site Assessor)- 6


மொத்தம் -24


வயது வரம்பு


27.07.2025 தேதியின்படி, டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு அதிகபடியாக 41 வயது வரை இருக்கலாம். உதவி மேனேஜர் பதவிக்கு 32 வயது வரை இருக்கலாம்.


தள மதிப்பீட்டாளர் பதவிக்கு அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம்.


கல்வித்தகுதி


டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் மற்றும் உதவி மேனேஜர் பதவிக்கு அந்தந்த பிரிவுகளுக்கு ஏற்ப பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 


டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு 11 ஆண்டுகளும், உதவி மேனேஜர் பதவிக்கு 2 ஆண்டுகளும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


தள மதிப்பீட்டாளர் பதவிக்கு 10-ம் வகுப்பிற்கு பின்பு எலெக்ட்ரிக்கல் சார்ந்த ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


மேலும் 1 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பள விவரம்


டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு ரூ.70,000 முதல் ரூ.2,00, 000 வரை சம்பளம் வழங்கப்படும்.


உதவி மேனேஜர் பதவிக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.


தள மதிப்பீட்டாளர் பதவிக்கு மாதம் அடிப்படை சம்பளம் ரூ.13,802 என தோராயமாக ரூ.25,120 வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை


மேனேஜர் தகுதி பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு என அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


தள மதிப்பீட்டாளர் பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு உண்டு. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிப்பார்க்கப்பட்டு பணி வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள் கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, லட்சத்தீவுகள் ஆகிய இடங்களில் பணி நியமனம் வழங்கப்படும்.


இப்பணியிடங்களுக்கான தேர்வு 125 கேள்விகள் கொண்டு கொள்குறி வகையில் (objective type) நடத்தப்படும். 2.5 மணி நேரம் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். 


நெகட்டிங் மார்க் கிடையாது. இதில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.


 எஸ்சி, எஸ்டி, ஒபிசி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் 45% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை


ரயில்வே கீழ் செயல்படும் ரைட்ஸ் நிறுவனத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.rites.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், EWS ரூ.300 செலுத்த வேண்டும். தள மதிப்பீட்டாளர் பதவிக்கு ரூ.300 செலுத்த வேண்டும்.


இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டு பெறப்படும் நிலையில், ஜூலை 27 வரை விண்ணப்பிக்கலாம்.


 அறிவிப்பை பார்க்க 


https://www.rites.com/Career


விண்ணப்பிக்க கடைசி நாள்


 27.07.2025


ரயில்வே துறையில் கீழ் பணி செய்ய விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment