பொறியியல் பட்டதாரிகளுக்கு 28 காலிப்பணியிடங்களுக்கான ரூ 37,000 சம்பளத்தில் அரசு வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Monday, July 8, 2024

பொறியியல் பட்டதாரிகளுக்கு 28 காலிப்பணியிடங்களுக்கான ரூ 37,000 சம்பளத்தில் அரசு வேலை வாய்ப்பு

 பொறியியல் பட்டதாரிகளுக்கு 28 காலிப்பணியிடங்களுக்கான ரூ 37,000 சம்பளத்தில் அரசு வேலை வாய்ப்பு


சென்னையை அடுத்த ஆவடி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள ஜேஆர்எப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


சென்னையை அடுத்த ஆவடி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள ஜேஆர்எப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவி: Junior Research Fellowship


காலியிடங்கள்: 28


துறைவாரியான காலியிடங்கள்:


1. மெக்கானிக்கல் - 13


2. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் - 9


3. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் - 4


4. கணினி அறிவியல் - 2


தகுதி: 


பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்து கேட்-2024 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்: 


மாதம் ரூ. 37,000 + எச்ஆர்ஏ


வயதுவரம்பு: 


12.7.2024 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை: 


கேட் தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண் மற்றும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு விவரம் தகுதியானவர்களுக்கு அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கும், இணையதளத்திலும் தெரிவிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை: 


www.drdo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:


The Director, CVRDE-DRDO, Avadi, Chennai - 600 054


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 


12.7.2024

No comments:

Post a Comment