YouTube யில் வரும் வீடியோக்களின் விளம்பரங்களை இனி பிளாக் செய்தால் ஆடியோ துண்டிக்கப்படும்: யூடியூப் நிர்வாகம் அதிரடி - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, June 4, 2024

YouTube யில் வரும் வீடியோக்களின் விளம்பரங்களை இனி பிளாக் செய்தால் ஆடியோ துண்டிக்கப்படும்: யூடியூப் நிர்வாகம் அதிரடி

 YouTube யில் வரும் வீடியோக்களின் விளம்பரங்களை இனி பிளாக் செய்தால் ஆடியோ துண்டிக்கப்படும்: யூடியூப் நிர்வாகம் அதிரடி


யூடியூப் நிர்வாகம் தனது தளத்தில் மூன்றாம் தரப்பு ’ஆட் பிளாக்கர்’ எனப்படும் விளம்பரத் தடுப்பான்கள் மீது அடுத்தக்கட்ட போரினைத் தொடங்கியுள்ளது.


கூகுள் மற்றும் யூடியூப் தளங்களின் வருவாய் என்பது விளம்பரம் மூலமாகவே தீர்மானிக்கப்படுகிறது. அதிலும் வளர்ந்து வரும் வீடியோ தளமான யூடியூப் விளம்பரம் வாயிலாக தானும் வளம் கொழிப்பதோடு, தன்னை நம்பிய கிரியேட்டர்களையும் வாழ வைத்து வருகிறது. யூடியூப் வீடியோக்களின் இடையிடையே தோன்றும் இந்த விளம்பரங்களே யூடியூப் நிர்வாகம் முதல் அதன் கிரியேட்டர்கள் வரை சகலருக்கும் ஆதாரமாக அமைந்துள்ளன. ஆனால் சில பயனர்கள் இந்த விளம்பரங்களை தவிர்ப்பதற்கு தொழில்நுட்ப உதவியிலான ஆட் பிளாக்கர்களை பயன்படுத்தி வருகின்றனர்.


இதனால் வீடியோக்களில் விளம்பரங்கள் தலையெடுக்கும்போதே அவற்றை ஆட் பிளாக்கர்கள் தடை செய்துவிடுகின்றன. பயனர்களின் இந்த போக்கு யூடியூப் நிர்வாகத்துக்கு பெரும் தலைவலியானது. எனவே ஆட் பிளாக்கர்களை பிரயேகிக்கும் பயனர்களுக்கு எதிராக பாய்ச்சல் நடவடிக்கையை யூடியூப் எடுத்தது. முன்னதாக ஆட் பிளாக்கர்களை பயன்படுத்தும் பயனர்கள் தயவுசெய்து அவற்றை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள் அல்லது விளம்பரங்களை விரும்பாத பயனர்கள் கட்டண அடிப்படையிலான பிரீமியம் சந்தாதாரராக மாறிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டார்கள்.


ஆனால் கணிசமான பயனர்கள் யூடியூப் நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு இசைவதாக தெரியவில்லை. அவர்கள் தம்போக்கில் ஆட் பிளாக்கர்களை விதவிதமாக பயன்படுத்தி, விளம்பரங்கள் இல்லாத வீடியோக்கள் தரிசிப்பதை தொடர்ந்தனர். இதனையடுத்து அம்மாதிரியான மூன்றாம் தரப்பு ஆட்பிளாக்கர்களை பயன்படுத்தும் பயனர்கள் முழுமையாக வீடியோக்களை காண்பதற்கு வழியின்றி யூடியூப் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது. இதனால் ஆட் பிளாக்கர் பயன்படுத்தும் பயனர்கள், தங்களுக்கான வீடியோக்களை முழுமையாக காண வழியின்றி யூடியூப் அழுத்தத்துக்கு ஆளானார்கள்.


ஆட் பிளாக்கர்களுக்கு எதிரான அடுத்த பாய்ச்சலாக, ஆட் பிளாக்கர் பயன்படுத்தும் பயனர்களுக்கான வீடியோக்களில் ஆடியோ வசதியை யூடியூப் துண்டிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் ஆட் பிளாக்கர் பயன்படுத்தும் பயனர்கள் ஆடியோ இன்றியே வீடியோக்கள காண வேண்டியதாயிற்று. உலகின் மிகப்பெரும் வீடியோ தளமாக முன்னிலை வகிக்கும் யூடியூப் தளம், ஓடிடி வரிசையிலும் தனது பிரீமியம் சந்தாதாரர்களுக்கு தனி படைப்புகளை படையலிட்டு வருகிறது.


கொரோனா காலத்தில் ஓடிடி சந்தை மடைதிறந்த வெள்ளமானதில், அவற்றை பயன்படுத்தி தனது பிரீமியம் சந்தாதாரகளின் எண்ணிக்கையை யூடியூப் நிர்வாகம் அதிகரித்து வருகிறது. இந்த வகையிலும் ஆட் பிளாக்கர்களுக்கு எதிரான அஸ்திரத்தை அதிகம் பிரயேகிக்க ஆரம்பித்துள்ளது யூடியூப் நிர்வாகம்.

No comments:

Post a Comment