ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் வங்கிக் கணக்கு அவசியம் - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, June 4, 2024

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் வங்கிக் கணக்கு அவசியம்

 ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் வங்கிக் கணக்கு அவசியம்



'மாணவர் பெயரில் வங்கிக் கணக்கு இருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை கிடைக்கும்' என, பள்ளிக்கல்வி துறை நிபந்தனை விதித்து உள்ளது.


அனைத்து வகை பள்ளி மாணவர்களும் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டியது அவசியம் என, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டு உள்ளது.


அதன் விபரம்:


இடைநிற்றல் இன்றி ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்க ஏதுவாக, கல்வி உதவித்தொகை, ஊக்க உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதை பெறுவதற்கு, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து மாணவர்களும், ஆதார் எண்ணை பயன்படுத்தி, வங்கிக் கணக்கு கட்டாயம் துவங்க வேண்டும்.


நேரடி பயனாளர் பரிமாற்ற முறையில், அந்த வங்கிக் கணக்கின் வழியாக, கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதற்கான வழிகாட்டு முறையை பின்பற்றி, மாணவர்களுக்கான வங்கிக் கணக்கை துவங்க, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment