புரதம் நிறைந்த காய்கறிகளை உண்பதால் ஏற்படும் நன்மைகள் - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, May 15, 2024

புரதம் நிறைந்த காய்கறிகளை உண்பதால் ஏற்படும் நன்மைகள்

 புரதம் நிறைந்த காய்கறிகளை உண்பதால் ஏற்படும் நன்மைகள்


புரதம் நிறைந்த காய்கறிகளை தினமும் உட்கொள்வதால் கிடைக்கும் 5 நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.


நம்முடைய உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஊட்டச்சத்துக்கள் முக்கியமான ஒன்று. 


 அதிலும் புரதசத்துக்கள் என்பது அனைவருக்கும் இன்றியமையாததாகிவிட்டது.  


 உடலில் தசைகள் ஆரோக்கியத்திற்கும், எலும்புகள் வலுப்பெறவும் புரதம் கண்டிப்பாக தேவை.  இதனால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புரோட்டீன் நிறைந்த பால், முட்டை, மற்றும் பிற அசைவ உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பார்கள்.


புரதம் நிறைந்த காய்கறிகளில் முக்கியமான ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.  அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.  அந்த வகையில், புரதம் நிறைந்த காய்கறிகளை உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.


புரதம் நிரம்பிய ப்ரோக்கோலி மற்றும் காளான் போன்ற உணவுகளை எடுத்துக் கொண்ட பிறகும் அடிக்கடி பசி எடுப்பதை தடுக்கிறது.  இவற்றை உணவாக எடுத்துக் கொண்டால், அது நீண்ட நேரத்திற்கு உங்களை பசி இல்லாமல் வைத்திருக்க உதவும்.


பட்டாணி மற்றும் கீரை போன்ற காய்கறிகள் உங்கள் வளர்சிதை மாற்றத்திற்கு இயற்கையான ஊக்கத்தை அளிக்கிறது. 


மேலும்,  உடலுக்கு வலுச்சேர்க்கிறது.மேலும் இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. 


 செரிமானத்திற்கு உதவுகின்றன.புரதம் நிறைந்த காய்கறிகள் இதய ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.


புரதம் நிறைந்த காய்கறிகள் தோல், முடி மற்றும் நகங்களுக்கு ஊட்டமளித்து,  இயற்கையான பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது.

No comments:

Post a Comment