14 வகையான எளிய வீட்டு வைத்திய குறிப்புகள் - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, May 14, 2024

14 வகையான எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்

 14  வகையான எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்


* பூண்டுச் சாற்றில் சிறிது உப்பு சேர்த்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி நீவிவிட சுளுக்கு சரியாகும்.


* புளியம் இலைகளை விழுதாக அரைத்து வீங்கியிருக்கும் மூட்டுகளில் பற்றுப் போட்டால் வீக்கம் குறையும்.


* வெங்காயச் சாறுடன் கடுகு எண்ணெய் கலந்து மூட்டுகளில் தடவினால் வாயுவால் ஏற்படும் மூட்டுவலி மறையும்.


* ஓமத்தை ஊறவைத்து தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, இந்த விழுதை வாணலியில் கிளறி பொறுக்கும் சூட்டில் வலியுள்ள இடத்தில் பற்றுப் போட வீக்கம், வலி குறையும்.


* சீரகத்தை பொன் வறுவலாக வறுத்துப் பொடி செய்து அதனுடன் கல்கண்டு சேர்த்து சாப்பிட இருமல் குணமாகும்.


* ரோஜா இதழ் சேர்த்த நீரை குடித்துவர உடல் குளிர்ச்சியாகும். உஷ்ணக் கட்டிகள் வராது.


* தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு நீங்கும்.


* காராமணியை வேகவைத்து அதனுடன் சுக்குத்தூள், மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட மூட்டுவலி குணமாகும்.


* பலவகைகளில் காராமணியை உணவில் சாப்பிட, உடல் தசைகள், தோல் நோய்கள் வராது.


* கொய்யா இலை தேநீர், சர்க்கரை அளவை குறைத்து, கட்டுப்படுத்தும்.


* விரலி மஞ்சளை சுட்டு கரியாக்கி 2 ஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட விக்கல் நிற்கும்.


* உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சு சளி குறையும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றும். ரத்த சோகை குணமாகும்.


* படிகார நீரால் சில நாட்கள் முகத்தைக் கழுவிவர முகப்பருக்களால் தோன்றும் தழும்புகள் மறையும்.


* நாவல் பொடியை மோரில் கலந்து குடிக்க நீரிழிவு மட்டுப்படுவதோடு, குடல் புற்றுநோய் வராமலும் பாதுகாக்கும்.

No comments:

Post a Comment