வாந்தி, குமட்டல், தலைசுற்றல் ஆகியவற்றை குணப்படுத்தும் இயற்கையான பொருட்கள் - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, October 28, 2023

வாந்தி, குமட்டல், தலைசுற்றல் ஆகியவற்றை குணப்படுத்தும் இயற்கையான பொருட்கள்

 வாந்தி, குமட்டல், தலைசுற்றல் ஆகியவற்றை குணப்படுத்தும் இயற்கையான பொருட்கள்



ரயில், பேருந்து, விமானம் உள்ளிட்ட பயணத்தின் போதோ அல்லது அசெளகரிய உணர்வு ஏற்படும் போது வாந்தி, குமட்டல், தலைசுற்றல் போன்றவை ஏற்படும். வாந்தியெடுத்தல் எலக்ட்ரோலைட்டுகளை விரைவாகக் குறைத்து, உங்களை நீரிழப்புக்கு உட்படுத்தும், எனவே வாந்தியைத் தடுத்து, உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது முக்கியம். இவற்றை இயற்கையான சில பொருட்களை வைத்து முற்றிலுமாக குணப்படுத்தலாம்.


கிராம்பு


செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும் கிராம்பு குமட்டலை நிறுத்தும் திறன் உள்ளதால் ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பயணத்தின் போது ஏற்படும் குமட்டலில் இருந்து நிவாரணம் பெற பச்சை கிராம்புகளை மென்று சாப்பிடலாம்.


சீரகம்


குடல் இயக்கத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும் சீரகம், செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. குமட்டல் மற்றும் வாந்தியை தடுக்க சீரகப் பொடியை தண்ணீரில் கலந்து குடித்தால் தீர்வளிக்கும்.


புதினா


இது வயிற்று தசைகளை வலுவாக்கும். புதினா இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நுண்ணுயிர்களை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. பயணத்தின் போது ஏற்படும் குமட்டல், வாந்தி, தலைசுற்றலை தடுக்க புதினா இலைகளை மென்று வரலாம்.


எலுமிச்சை


பயணத்தின் போது வாந்தி எடுப்பவர்கள் பெரிதும் தங்களுடன் எலுமிச்சை பழத்தை கொண்டு செல்வ மறப்பதில்லை. எலுமிச்சை சாறு உட்கொள்வதன் மூலம் வயிற்றில் ஒரு சுத்திகரிப்பு ஆலை போல் செயல்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி பயணத்தின் போது குமட்டல் அறிகுறிகளை தடுத்து நிறுத்தும்.

No comments:

Post a Comment