தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, October 28, 2023

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

 தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு


தமிழ்நாட்டில் ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி சுகுணா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.


சென்னையை அடுத்த அம்பத்தூரில் வடமாநில தொழிலாளர்கள், ரோந்து சென்ற காவல்துறையினரை தாக்கியது சர்ச்சையான நிலையில், காவல்துறை அதிகாரிகளின் பணியிட மாற்றம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், 


பொள்ளாச்சி துணை பிரிவு உதவி ஆணையராக இருந்த பிருந்தா, எஸ்.பி.ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சேலம் மாநகர வடக்கு மண்டல துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் துணை மண்டல உதவி கண்காணிப்பாளராக இருந்த ஐமான் ஜமால் ஐபிஎஸ், பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஆவடி சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.


சேலம் மாநகர வடக்கு மண்டலத்தின் துணை ஆணையராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி கௌதம் கோயல், தாம்பரம் காவல் ஆணையரகத்தின், பள்ளிக்கரணை சட்டம் - ஒழுங்கு துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.


ஆவடி சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் என். பாஸ்கரன், மதுரையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 6வது பெட்டாலியன் கமாண்டன்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.


சென்னை ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி சுகுணா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment