மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் (CBSE) 124 காலிப்பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, December 14, 2025

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் (CBSE) 124 காலிப்பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு..!

 மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் (CBSE) 124 காலிப்பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு..!


2026-ம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப் A, B, C பிரிவில் உள்ள உதவிப் பேராசிரியர், உதவி செயலாளர், கணக்கு அதிகாரி, மேற்பார்வையாளர், ஜூனியர் கணக்காளர் உள்ளிட்ட ஏராளமான பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


2026-ம் ஆண்டுக்கான அகில இந்திய அளவிலான போட்டித்தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி செயலாளர், உதவிப் பேராசிரியர், கணக்கு அதிகாரி, மேற்பார்வையாளர், ஜூனியர் மொழிப்பெயர்பாளர், ஜூனியர் கணக்காளர், ஜூனியர் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 124 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி, டிசம்பர் 2-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.


பணியின் விவரங்கள்


துறை


மத்திய கல்வித்துறை


பிரிவு


சிபிஎஸ்இ



பதவியின் பெயர்


உதவி செயலாளர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பதவிகள்



காலிப்பணியிடங்கள்


124


இணையதளம்


https://www.cbse.gov.in/


அறிவிப்பு


சிபிஎஸ்இ


காலிப்பணியிடங்களின் விவரம்


உதவி செயலாளர்- 8


உதவிப் பேராசிரியர் (Academics)- 12


உதவிப் பேராசிரியர் (Training) -8


உதவிப் பேராசிரியர் (Skill Education)- 7


கணக்கு அதிகாரி -2


மேற்பார்வையாளர்- 27


ஜூனியர் மொழிப்பெயர்பாளர்- 9


ஜூனியர் கணக்காளர் -16


ஜூனியர் உதவியாளர் -35


மொத்தம்- 124


தகுதிகள் என்னென்ன?


உதவி செயலாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.


 விண்ணப்பதார்கள் 35 வயது வரை இருக்கலாம்.


உதவிப் பேராசிரியர் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு, B.Ed./M.Ed/ NET/SLET/ NET-JRF/ முனைவர் பட்டம் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 


30 வயது வரை இருக்கலாம்.


கணக்கு அதிகாரி பதவிக்கு பொருளாதாரம்/ வணிகம்/ கணக்குகள்/ நிதி/ வணிக ஆய்வுகள்/

செலவு கணக்கியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பு, SAS/JAO(C) தகுதி, முதுகலைப் பட்டப்படிப்பு அல்லது M.B.A/CA/ICWA ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 35 வயது வரை இருக்கலாம்.


மேற்பார்வையாளர் பதவிக்கு இளங்கலை பட்டப்படிப்பு, கணினி பயன்பாடு குறித்த திறன் தேவை. 30 வயது வரை இருக்கலாம்.


ஜூனியர் மொழிப்பெயர்பாளர் அதிகாரி பதவிக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் கொண்டு முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 30 வயது வரை இருக்கலாம்.


ஜூனியர் கணக்காளர் பதவிக்கு 12-ம் வகுப்பு கல்வித்தகுதியுடன் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். 27 வயது வரை இருக்கலாம்.


ஜூனியர் உதவியாளர் பதவிக்கு 12-ம் வகுப்பு தகுதியுடன் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். 27 வயது வரை இருக்கலாம்.


தேர்வு செய்யப்படுவது எப்படி?


இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்பார்வையாளர், ஜூனியர் கணக்காளர், ஜூனியர் உதவியாளர் பதவிகளுக்கு நேர்காணலுக்கு பதில் திறன் தேர்வு நடைபெறும். ஜூனியர் மொழிப்பெயர்பாளர் பதவிக்கு முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகள் நடைபெறும்.


சம்பளம் எவ்வளவு?


உதவி செயலாளர், உதவிப் பேராசிரியர், கணக்கு அதிகாரி ஆகிய பதவிகளுக்கு நிலை 10 கீழ் சம்பளம் வழங்கப்படும்.


மேற்பார்வையாளர், ஜூனியர் மொழிப்பெயர்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிலை 6 கீழ் சம்பளம் வழங்கப்படும்.


ஜூனியர் கணக்காளர், ஜூனியர் உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு நிலை 2 கீழ் சம்பளம் வழங்கப்படும்.


விண்ணப்பிப்பது எப்படி?


சிபிஎஸ்இ-யில் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு ஆர்வமாக உள்ளவர்கள் https://www.cbse.gov.in/cbsenew/recruitment.html என்ற இணையதளத்தில் உள்ள ஆன்லைன் லிங்கின் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.


 விண்ணப்பக் கட்டணமாக ரூ.1750 - 1050 வரை செலுத்த வேண்டும். 


எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள் ரூ.250 செலுத்த வேண்டும்.


முக்கிய நாட்கள்

விவரம்



விண்ணப்பம் தொடக்கம் :02.12.2025


விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.12.2025


விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 22.12.2025


தேர்வு: பின்னர் அறிவிக்கப்படும்


மத்திய அரசு கல்வித்துறையின் கீழ் இயங்கும் சிபிஎஸ்இ-யில் உள்ள பணி வாய்ப்புகளுக்கு ஆர்வமாக உள்ளவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் உரிய விவரங்களுடன் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment