41 காலிப்பணியிடங்களுக்கு ரூ 67,100 ஊதியத்தில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Friday, December 12, 2025

41 காலிப்பணியிடங்களுக்கு ரூ 67,100 ஊதியத்தில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு..!

 41 காலிப்பணியிடங்களுக்கு ரூ 67,100 ஊதியத்தில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு..!


தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் 41 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.


தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் 41 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.


பணியின் விவரங்கள்


துறையின் பெயர்


 பொது சுகாதாரத்துறை


தேர்வு வாரியம்


 தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்


பதவியின் பெயர்


 கள உதவியாளர்


காலிப்பணியிடங்கள் 


41


இணையதளம்


 https://mrb.tn.gov.in/


அறிவிப்பு


 எம்ஆர்பி கள உதவியாளர் 2025


காலிப்பணியிடங்களின் விவரம்


கள உதவியாளர் பதவியில் உள்ள 41 காலிப்பணியிடங்கள் 


பொதுப் பிரிவு - 9


 பிசி - 10, பிசி(எம்) - 1


 எம்பிசி/ டிஎன்சி - 5


 எஸ்சி - 13


எஸ்டி - 13 


என நிரப்பப்படுகிறது.


வயது வரம்பு


01.07.2025 தேதியின்படி, வயது வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். அதிகபடியான வயது வரம்பு என பிரிவிற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவிற்கு 32 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 42 வயது வரையும், முன்னாள் ராணுவத்தினருக்கு 48 வயது வரையும் உள்ளன. எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, பிசி, பிசிஎம், எம்பிசி மற்றும் டிஎன்சி ஆகிய பிரிவினருக்கு உச்ச வயது கிடையாது. அதே போன்று, கணவரை இழந்த பெண்களுக்கு எந்த பிரிவினருக்கும் வயது வரம்பு கிடையாது.


கல்வித்தகுதி


எம்ஆர்பி மூலம் நிரப்பப்படும் கள உதவியாளர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் 1 வருட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். நல்ல உடல்நலன், கண் திறன் பெற்றிருக்க வேண்டும். வெளியில் சென்று பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். கல்வித்தகுதி என்பது 09.12.2025 தேதியின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யப்படும் முறை


தமிழ்நாடு அரசில் உள்ள இப்பதவிக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவை கிடையாது. விண்ணப்பதார்களின் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் 20 சதவீதம், 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் 30 சதவீதம் மற்றும் சான்றிதழ் படிப்பு 50 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்படும். விதிமுறைகளுக்கு உட்பட்டு இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும்.


சம்பள விவரம்


எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 5 கீழ் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?


கள உதவியாளர் பதவிக்கு ஆர்வமாக உள்ளவர்கள் அவர்களின் விவரங்களை https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அளித்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவரை இழந்த பெண்கள் ரூ.300 மட்டும் செலுத்தினால் போதுமானது.


படி 1 : https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.


படி 2 : முகப்பு பக்கத்தில் Notification எனப்தை கிளிக் செய்யவும்.


படி 3 : தொடர்ந்து, அறிவிப்பு எண்.19 நேராக விண்ணப்பிக்க லிங்க் இடம்பெற்று இருக்கும்.அதனை கிளிக் செய்தால் மற்றொரு பக்கம் திறக்கும்.


படி 4 : அதில் புதிய விண்ணப்பதார்கள் பதிவு செய்து, விண்ணப்பிக்க வேண்டும். உபயோகத்தில் உள்ள மொபைல் எண், புகைப்படம், கையொப்பம், கல்வித்தகுதி ஆகியவை தேவையாகும்.


படி 5 : இறுதியாக விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


முக்கிய நாட்கள்


விண்ணப்பிக்க கடைசி நாள்


29.12.2025


கட்டணம் செலுத்தக் கடைசி நாள்


29.12.2025


தெரிவு பட்டியல்


விரைவில் அறிவிக்கப்படும்.


தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் இந்த பணிக்கு, தகுந்த கல்வித்தகுதி உடையவர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

No comments:

Post a Comment