பள்ளிகளில் பணிபுரிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு 47,600 முதல் 1,51,100 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, November 22, 2025

பள்ளிகளில் பணிபுரிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு 47,600 முதல் 1,51,100 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 பள்ளிகளில் பணிபுரிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு 47,600 முதல் 1,51,100 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


சிபிஎஸ்இ கீழ் மத்திய அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள தமிழ் ஆசிரியர்கள் டிசம்பர் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


மத்திய கல்வித்துறையின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை சிபிஎஸ்இ மூலம் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பம் பெறப்படுகிறது. இதில் பல்வேறு பாடங்களில் முதுகலை பட்டதாரி, பட்டதாரி மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மொத்தம் 14,967 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் ஆசிரியர் பதவிகளில் மட்டும் 13,025 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.


இதில் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பதவிக்கு காலிப்பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.


நவோதயா வித்யாலயா பள்ளிகள்


மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் பள்ளிக் கல்வியில் நவோதயா வித்யாலயா சமிதி செயல்படுகிறது. 8 மண்டலங்கள் கொண்டு செயல்படும் இப்பள்ளி நிர்வாகத்தின் கீழ் இந்தியா முழுவதும் 653 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் செயல்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் நவோதயா பள்ளி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. கிராமப்புற மாணவர்களின் கல்விக்கு இப்பள்ளி குடியிருப்பு வசதியுடன் உள்ள பள்ளி ஆகும்.


நவோதயா வித்யாலயாவில் தமிழ் ஆசிரியர்கள்


நவோதயா வித்யாலயாவின் கீழ் நவீன இந்திய மொழியின் கீழ் 7 மொழிகள் கற்பிக்கப்படுகிறது. இதில் தமிழ் மொழியும் ஒன்றாகும். அதே போன்று, மூன்றாம் மொழி பிரிவில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பிரிவில் தமிழ் மொழி இடம்பெற்றுள்ளது. அதன்படி, தமிழ் மொழியில் முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளன.


முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் -1


பட்டதாரி தமிழ் ஆசிரியர் -5


மொத்தம் 6


பட்டதாரி தமிழ் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பொதுப்பிரிவு - 4, ஒபிசி - 1 என நிரப்பப்படுகிறது.


தமிழ் ஆசிரியர் பதவிக்கான தகுதிகள்


முதுகலை ஆசிரியர் பதவிக்கு அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம். தமிழ் பாடத்தில் B.Ed ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்பு 50 சதவீத தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


(அல்லது)


50 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் B.Ed/ 3 வருடம் ஒங்கிணைந்த B.Ed.-M.Ed முடித்திருக்க வேண்டும். (அல்லது)


4 வருட ஒங்கிணைந்த பட்டப்படிப்புடன் B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



பட்டதாரி தமிழ் ஆசிரியர் பதவிக்கு 35 வயதைக் கடந்திருக்கக்கூடாது. 4 வருடங்கள் ஒங்கிணைந்த டிகிரியுடன் B.Ed (அல்லது) டிகிரியுடன் B.Ed/ 3 வருட B.Ed.-M.Ed (அல்லது) முதுகலை டிகிரியுடன் B.Ed.-M.Ed ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.


இப்பதவிகளுக்கு கணினி பயன்பாடு தெரிந்திருக்க வேண்டும்.


சம்பள விவரம்


முதுகலை ஆசிரியர் பதவிக்கு நிலை 8 கீழ் ரூ.47,600 முதல் 1,51,100 வரை சம்பளம் வழங்கப்படும்.


பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு நிலை 7 கீழ் ரூ.44,900 முதல் 1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை


நவோதயா வித்யாலயாவில் உள்ள தமிழ் ஆசிரியர் உட்பட அனைத்து பதவிகளுக்கு 2 கட்ட தேர்வு முறை மற்றும் நேர்காணல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வு ஓஎம்ஆர் தாளில் 100 கேள்விகளுடன் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். இதில் மொழி திறன் பகுதி இடம்பெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்டத் தேர்விற்கு தகுதி அடைவார்கள். இத்தேர்வு தமிழ் ஆசிரியர்களுக்கு தமிழ் மொழியில் நடைபெறும்.


பென் - பேப்பர் மற்றும் ஓஎம்ஆர் சேர்ந்து இணைந்து நடத்தப்படும். கொள்குறி வகையில் 60 கேள்விகள் மற்றும் விரிவாக விடையளிக்கும் வகையில் 10 கேள்விகள் என்ற விதம் இடம்பெறும். இதில் தேர்வாகும் நபர்களுக்கு நேர்காணல் நடைபெறும். இறுதியாக தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.


விண்ணப்பிப்பது எப்படி?


நவோதயா வித்யாலயாவில் தமிழ் ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.cbse.gov.in/ அல்லது https://kvsangathan.nic.in/ அல்லது

https://navodaya.gov.in/ என்ற இணையதளங்களில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.1,500 மற்றும் விண்ணப்பம் பிராசஸ் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். SC/ST/PwBD பிரிவினர் தேர்வு கட்டணம் செலுத்த விலக்கு அளிக்கப்படுகிறது.


விண்ணப்பிக்க கடைசி நாள்


04.12.2025 இரவு 11.50 மணி வரை


மத்திய அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பதவிக்கு குறிப்பிட்ட நாளுக்குள் கட்டணத்தை செலுத்தி ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் அட்மிட் கார்டு உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment