பெல் நிறுவனத்தில் 610 காலிப்பணியிடங்களுக்கு ரூ 30,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு
மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பெங்களூரு வளாகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் இந்நிறுவனத்தில் உள்ள பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
பெங்களூரில் அமைந்துள்ள பெல் நிறுவன கிளையில் தற்காலிக அடிப்படையில் 610 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ப்பட உள்ளன. இதில் 488 காலிப்பணியிடங்கள் பெங்களூரிலும், 122 காலிப்பணியிடங்கள் தேசிய அளவிலும் நிரப்பப்படுகிறது.
இதில் எலெக்ட்ரிக்கல் - 301, மெக்கானிக்கல் - 186, எலெக்ட்ரிக்கல் - 79, கணினி அறிவியல் - 44 என நிரப்பப்படுகிறது. இவை பொதுப்பிரிவு - 247, பொருளாதாரத்தில் பின்தங்கியவர் - 61, ஒபிசி - 165, எஸ்சி - 81, எஸ்டி - 46 என இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும்.
வயது வரம்பு
பொறியியல் டிரைய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொது மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் அதிகபடியாக 28 வயதைக் கடந்திருக்கக்கூடாது. ஒபிசி 3 ஆண்டுகள் வரையும், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையும் தளர்வு வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதி
மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கணினி அறிவியல், எலெக்ட்ரிக்கல் ஆகியவற்றில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு (BE/B.Tech/B.Sc) ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும். அந்தந்த முதன்மை பொறியியல் பிரிவிற்கு சம்மந்தமான பாடப்பிரிவுகளில் பொறியியல் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்
இப்பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். முதல் ஆண்டு மாதம் ரூ.30 ஆயிரம், இரண்டாம் ஆண்டு ரூ,.35,000, மூன்றாம் ஆண்டு ரூ.40,000 என சம்பளம் வழங்கப்படும். இவையில்லாமல் வருடத்திற்கு ரூ.12,000 மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட இதர செலவுகளுக்கு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு தகுதியானவக்ரள் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதி அடைவார்கள். விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்விற்கான அழைப்பு எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் மூலம் விடுக்கப்படும். எழுத்துத் தேர்வு 85 மதிப்பெண்களுக்கு 90 நிமிடங்கள் நடத்தப்படும். தொழில்நுட்பம் மற்றும் நுண்ணறிவு சார்ந்த கேள்விகள் இடம்பெறும். இதில் 0.25 நெகட்டிங் மதிப்பெண்கள் உள்ளன. தேர்வு பெங்களூரில் நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
பெல் நிறுவனப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொறியியல் பட்டதாரிகள் https://bel-india.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம். இதற்கு கட்டணமாக ரூ.177 செலுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு உள்ளது. செப்டம்பர் 24-ம் தேதி முதல் விண்ணப்பம் தொடங்கிய நிலையில், அக்டோபர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அக்டோபர் மாதம் தேர்வு நடைபெறும்.
அறிவிப்பைப் பார்க்க
https://bel-india.in/wp-content/uploads/2025/09/Final-TE-ADVT-2025.pdf
முக்கிய நாட்கள்
விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்
24.09.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்
07.10.2025
எழுத்துத் தேர்வு
25,26 அக்டோபர் 2025
விண்ணப்பதார்கள் எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 35 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 30 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும்.

No comments:
Post a Comment