மாவட்டத்தில் 11 வட்டங்களில் 155 கிராம் உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ.11,100 முதல் ரூ 35,100 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, October 25, 2025

மாவட்டத்தில் 11 வட்டங்களில் 155 கிராம் உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ.11,100 முதல் ரூ 35,100 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 மாவட்டத்தில் 11 வட்டங்களில் 155 கிராம் உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ.11,100 முதல் ரூ 35,100 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!



தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் உள்ள கிராம உதவியாளர் பணிக்கு மாவட்ட வாரியாக விண்ணப்பம் பெறப்பட்ட நிரப்பப்படுகிறது. அந்த வகையில், மதுரையில் உள்ள பணியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கிராம உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரை மாவட்ட வருவாய் அலகின் கீழ் உள்ள 11 வட்டங்களில் காலியாக உள்ள 155 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் மதுரை கிழக்கு, கள்ளிக்குடிவட்டம், மேலூர், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, திருமங்கலம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி, மதுரை மேற்கு, பேரையூர், திருப்பரங்குன்றம் ஆகிய வட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்படுகிறது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும்.


மதுரை கிராம உதவியாளர் வேலை 2025


வட்டத்தின் பெயர்

 காலிப்பணியிடங்கள்


மதுரை கிழக்கு -35


கள்ளிக்குடி -02


மேலூர் -23


மதுரை வடக்கு - 15


மதுரை தெற்கு- 7


திருமங்கலம் -7


உசிலம்பட்டி- 8


வாடிப்பட்டி -13


மதுரை மேற்கு -11


பேரையூர் -28


திருப்பரங்குன்றம்- 6


மொத்தம் - 155


தகுதிகள்


மதுரை மாவட்ட பணியிடங்களுக்கு 01.10.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபடியாக 32 வயதும், பிசி,எம்பிசி பிரிவினருக்கு 39 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 42 வயது வரையும் இருக்கலாம். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு உள்ளது.


கல்வித்தகுதியாக தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இடைநிலைப்பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் தேர்வில் தமிழ் ஒரு பாடமாக கொண்டு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மிதிவண்டி அல்லது இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.


தமிழில் எழுத வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.


விண்ணப்பதார்கள் விண்ணப்பிக்கும் பகுதிக்கு சம்பந்தப்பட்ட கிராமம்/ தாலுகா எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.


விண்ணப்பிப்பது எப்படி?


மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க

 https://madurai.nic.in/notice_category/recruitment/ 


என்ற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.


 தொடர்ந்து, அதில் கேட்டிருக்கும் விவரங்களை நிரப்பி, கல்வித்தகுதி, வீட்டு முகவரி, அடையாள சான்று ஆகியவற்றை இணைத்து தபால் வழியாகவோ அல்லது நேரடியாகவோ வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.


 மதுரை கிராம உதவியாளர் பணிக்கு 


https://madurai.nic.in/notice_category/recruitment/


விண்ணப்பிக்க நிரப்ப தேவையான ஆவணங்கள்


3 மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்


10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்


பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல்


சாதிச்சான்று நகல்


இருப்பிடச் சான்று நகல்


ஆதார் அட்டை நகல்

வாக்காளர்


 அடையாள அட்டை நகல்


குடும்ப அட்டை நகல்


முன்னுரிமை கோருபவராயின் அதற்கான சான்று நகல்


ஓட்டுநர் உரிமம் இருப்பின் அதன் நகல்


வேலைவாய்ப்பு பதிவு அட்டை இருப்பின் அதன் நகல்


முக்கிய நாட்கள்


விண்ணப்பிக்க கடைசி நாள்


 15.11.2025


நேர்காணல் : தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்படும்.


மதுரை மாவட்டத்தில் 11 தாலுக்காவில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்பித்திருக்க வேண்டும். நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

No comments:

Post a Comment