சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் அருமையான மருந்து,..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, August 17, 2025

சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் அருமையான மருந்து,..!

 சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்  அருமையான மருந்து,..!


வெங்காரப் பொடி


தேவையான பொருள்கள்:


திப்பிலி – 100 கிராம்


வெங்காரம் – 100 கிராம்


கருப்பட்டி – தேவையான அளவு


செய்முறை:


வெங்காரத்தை மிக்ஸியில் போட்டுப் பொடித்துக் கொள்ளவும்.


 அடுத்து, திப்பிலியை தனியாகப் பொடித்து வைத்துக் கொள்ளவும்.


 பொடித்து வைத்திருக்கும் வெங்காரத்தை ஒரு கடாயில் போட்டு வறுக்கவும்.


 பொரியும் சத்தம் வரும்போது இறக்கி ஆற வைக்கவும்.


 அதனுடன் பொடித்து வைத்துள்ள திப்பிலிப் பொடியைக் கலந்து வைக்கவும். 


இந்தக் கலவையில் ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து சுவைக்கு சிறிது கருப்பட்டி சேர்த்துக்கொள்ளவும். 


தினமும் இருவேளைகள் சாப்பிடலாம்.


வெங்காரப் பொடியின் மருத்துவப் பயன்கள் 


“வெங்காரத்துக்கு பொரிகாரம், காரம், உருக்கினம் என வேறு பெயர்களும் உண்டு.


 உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்குதல், சிறுநீரைப் பெருக்குதல், கற்களைக் கரைத்தல் போன்ற குணங்கள் வெங்காரத்துக்கு உண்டு. 


பொரித்த வெங்காரத்தை 650 மில்லி கிராம் அளவு எடுத்து, இளநீரில் போட்டுக் குடித்தால் நீர்க்கட்டு (உடலில் நீர் கோத்தல்) பிரச்னை குணமாகும்.


காரமானது, வயிற்றுப் பிரச்னைகள் வரலாம் என்பதால் குழந்தைகளுக்கு இதை மருத்துவர் பரிந்துரையோடு மட்டுமே கொடுக்க வேண்டும்.


 வெங்காரப் பொடியில் திப்பிலி சேர்ப்பதால் இருமல், இரைப்பு ஆகியவையும் சரியாகும். 


கருப்பட்டி, அல்சர் எனப்படும் புண்களை குணப்படுத்தும்.


காலையும் இரவும் உணவுக்கு முன்பு வெங்காரப் பொடி எடுத்துக் கொள்ள வேண்டும்.


கொஞ்சம் கொஞ்சமாக சீறுநீரகக் கல் பிரச்னை சரியாக ஆரம்பிக்கும். 


10 நாள்கள் தொடர்ச்சியாக ஒரு டீஸ்பூன் சாப்பிட்டாலே நல்ல பலன் தெரியும்.

No comments:

Post a Comment