தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையில் ரூ 28,500 முதல் ரூ 68,400 வரை ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு துறைகளின் கீழ் வேலை எதிர்பார்ப்பவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசின் சுற்றுக்சூழல் துறையில் உள்ள பிராஜட் அசோசியேட்ஸ், சீனியர் கணக்கு அதிகாரி, தனி உதவியாளர் மற்றும் GIS அதிகாரி ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு அதிகபடியாக ரூ.68,400 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் கீழ் இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்கள் தற்காலிகம் ஆகும். அலுவலக விதிமுறைகளுக்கு உட்பட்டு நிரப்பப்படுகிறது.
பணியின் விவரங்கள்
பதவியின் பெயர்
பிராஜட் அசோசியேட்ஸ் 4
சீனியர் கணக்கு அதிகாரி 1
தனி உதவியாளர் 1
GIS அதிகாரி 1
மொத்தம் 7
வயது வரம்பு
இத்துறையின் கீழ் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவரக்ல் 01.08.2025 தேதியின்படி அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம். GIS அதிகாரி பதவிக்கு மட்டும் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி
பிராஜட் அசோசியேட்ஸ் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல்/ சுற்றுச்சூழல் மேனேஜ்மெண்ட் ஆகியவற்றில் பட்டப்படிப்பு முடித்தவர்களுகு முன்னுரிமை அளிக்கப்படும்.
அதே போல் சுற்றுச்சூழல் சார்ந்தவற்றில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை உண்டு.
விண்ணப்பதார்கள் கட்டாயம் ஆவணப்படுத்துதல் மற்றும் டிராஃபிட்டிங் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சீனியர் கணக்கு அதிகாரி பதவிக்கு பி.காம், வணிகம், கணக்கியல் அல்லது அதற்கு நிகரானவற்றில் பட்டப்படிப்பு, டாலி தெரிந்திருக்க வேண்டும். எம்.காம் அல்லது பி.காம் உடன் 5 வருடம் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தனி உதவியாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் தட்டச்சு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
GIS அதிகாரி பதவிக்கு RS/GIS பாடப்பிரிவில் பிஜி டிப்ளமோ உடன் 1 வருட அனுபவம் அல்லது டிகிரியுடன் கணினி தொழில்நுட்பம் மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்
பிராஜட் அசோசியேட்ஸ் பதவிக்கு ரூ.68,4000 மாத தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
சீனியர் கணக்கு அதிகாரி பதவிக்கு ரூ.68,400 வழங்கப்படும்.
தனி உதவியாளர் பதவிக்கு ரூ.28,500 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
GIS அதிகாரி பதவிக்கு மாதம் ரூ.34,000 தொகுப்பூதியமாக மாதம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் கீழ் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் தகுதிக்கு ஏற்ப தெரிவு செய்யப்பட்டு, எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
தேர்வு செய்யப்படும் முறை துறையின் முடிவாகும்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விரும்பமுள்ளவர்கள் https://environment.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஆன்லைன் விண்ணப்பத்திற்கான லிங்க் இடம்பெற்று இருக்கும். அதில் தேவையான விவரங்கள் அளித்து விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
GIS அதிகாரி பதவிக்கு மட்டும் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அறிவிப்பை பார்க்க
https://environment.tn.gov.in/assets/whatsnew/8d13decc8f30a831f3a414308db2fd5b.pdf
முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்
15.08.2025
GIS அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்
14.05.2025
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் கடைசி தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

No comments:
Post a Comment