விநாயகர் சதுர்த்தி 2025: விநாயகரை வழிபட உகந்த நேரம் மற்றும் பூஜை செய்யும் முறை - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, August 27, 2025

விநாயகர் சதுர்த்தி 2025: விநாயகரை வழிபட உகந்த நேரம் மற்றும் பூஜை செய்யும் முறை

 விநாயகர் சதுர்த்தி 2025: விநாயகரை வழிபட உகந்த நேரம் மற்றும் பூஜை செய்யும் முறை


விநாயகர் சதுர்த்தி விழா குழந்தைகள் முதல்வர் பெரியவர்கள் வரை அனைவராலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒன்று ஆன்மிக பண்டிகையாகும். விநாயகப் பெருமான் ஞானம், வெற்றிகளை தரக் கூடியவர் என்பதால் அனைத்து தரப்பினரும் விநாயகரின் அருளை பெறுவதற்காக பக்தி சிரத்தையுடன் வழிபடுவது உண்டு. விநாயகரை வழிபடும் முறை மிகவும் எளிமையானது என்றாலும், மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும்.


விநாயகப் பெருமானுக்குரிய புதன்கிழமையில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும். இதனால் விநாயகப் பெருமானின் அருளும், புத்திகாரகன் என ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படும் புதன் பகவானின் அருளையும் பெற முடியும்.


வீட்டில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பன்னீர் அல்லது தீர்த்தம் அல்லது மஞ்சள் கலந்த தண்ணீரால் சுத்தம் செய்து விட்டு, ஒரு மனையில் அழகாக கோலமிட்டு, அதன் மீது ஒரு தாம்பூலம் அல்லது வாழை இலையில் பச்சரிசி பரப்பி அதன் மீது விநாயகர் சிலையை வைக்க வேண்டும். விநாயகர் சிலையை அருகம்புல், எருக்கம்பூ மாலை, பூ அணிவித்து அலங்கரிக்க வேண்டும். விநாயகர் சிலையில் குண்டுமணி வைத்து கண் திறக்க வேண்டும். அவரது வயிற்றுப் பகுதியில் காசு ஒன்றை வைக்க வேண்டும்.


விநாயகருக்கு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள், சுண்டல், மோதகம், கொழுக்கட்டை, அவல், பொரி, கடலை உள்ளிட்ட நைவேத்தியங்கள் படைத்து வழிபட வேண்டும். விநாயகருக்குரிய விநாயகர் அகவல், எளிமையான விநாயகர் மந்திரங்கள் ஆகியவற்றை சொல்லி வழிபடுவது சிறப்பு. எதுவும் தெரியவில்லை என்றால் "ஓம் கம் கணபதியே நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி வழிபடலாம்.


வழிபடுவதற்கான நேரம் :


காலை 07.45 மணி முதல் காலை 08.45 மணி வரை


காலை 10.40 மணி முதல் பகல் 01.10 மணி வரை


மாலை 05.10 மணி முதல் இரவு 07.40 வரை


ஆகஸ்ட் 27ம் தேதி மாலை 03.52 மணியுடன் சதுர்த்தி திதி நிறைவடைந்து விடுகிறது.


 இருந்தாலும் சிலருக்கு மாலை நேரத்திலேயே விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்யும் வழக்கம் இருக்கும். அவர்கள் மாலை 5 மணிக்கு பிறகோ அல்லது 6 மணிக்கு பிறகோ விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை செய்து கொள்ளலாம்.


 விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு பிறகு விநாயகர் சிலை கரைப்பதை மட்டும், விநாயகர் சிலை வாங்கிய நாளை கணக்கிட்டு, 3 அல்லது 5 வது நாளில் எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். 


ஓடும் தண்ணீரில் விநாயகர் சிலையை கரைப்பது மிகவும் விசேஷமானதாகும்.

No comments:

Post a Comment