குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு எப்போது?முழு விவரம்
சென்னை: குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு செய்து வருகிறது.
அதன்படி கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 215, இளநிலை உதவியாளர் 1,621, தட்டச்சர் 1,099, இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் 2, இளநிலை வருவாய் ஆய்வாளர் 239, இளநிலை உதவியாளர்(பிணையம்) 46, இளநிலை உதவியாளர் 11, சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை-III) 368, உதவியாளர் 54, கள உதவியாளர் 19, வனக் காப்பாளர் 62, ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் 35, வனக் காவலர் 71 உள்ளிட்ட 3,935 பணியிடங்களுக்கு வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 25 முதல் மே 24 ஆம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 21 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். அதே நேரத்தில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக எழுத்தர், உதவியாளர், கள உதவியாளர் பணியிடங்களுக்கு 18 வயது நிறைந்திருந்தால் போதுமானது.
அதே நேரத்தில் உச்ச வயது வரம்பு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே மாற்றுத் திறனாளிகளுக்கு 42 ஆகவும் முன்னாள் ராணுவத்தினருக்கு 50 ஆகவும் கைம்பெண்களுக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
10ஆம் வகுப்புத் தேர்ச்சி
பொதுக் கல்வித் தகுதி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சர் பணிகளில் சேர, அரசு தொழில்நுட்ப தமிழ் அல்லது ஆங்கிலத் தட்டச்சுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை
ஓஎம்ஆர் முறையில் குரூப் 4 தேர்வு நடத்தப்படும்.
பகுதி அ- தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு – 150 மதிப்பெண்களுக்கு
பகுதி ஆ – பொது அறிவு
பகுதி இ – திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு – ஆ, இ இரண்டும் மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வர்கள் முதலில் https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ஒரு முறைப் பதிவில் பதிவு செய்த பின்பு, விண்ணப்பத்தை நிரப்பத் தொடங்க வேண்டும். அதில் பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்திருக்க வேண்டும்.
அதேபோல ஒரு முறைப் பதிவுடன் ஆதாரை இணைக்க வேண்டும்.
தொடர்ந்து APPLY என்ற பகுதியைச் சொடுக்கி, போதிய விவரங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வர்கள் ஏற்கெனவே ஒரு முறை பதிவில் பதிவு செய்திருப்பின், அவர்கள் இந்த தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாக பூர்த்தி செய்யத் தொடங்கலா
மேலும் விவரங்கள் அறிய
.https://tnpsc.gov.in/Document/tamil/Grp%20IV%20Tamil_.pdf
No comments:
Post a Comment