SBI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு ரூ 69,810 ஊதியத்தில் 150 காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் 150 சிறப்பு அதிகாரி(SO) பிரிவில் வர்த்தக நிதி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்:
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சிறப்பு அதிகாரி(SO) பிரிவில் வர்த்தக நிதி அதிகாரி(Trade Finance Officer) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 150 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும் அல்லது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் & ஃபைனான்ஸ் (IIBF)-ல் அந்நிய செலவாணி துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட கமர்ஷியல் வங்கிகளில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் ட்ரேட் பினான்ஸ் பிரிவில் பணியிற்றி இருப்பது அவசியம்.
SBI வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 23 அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Trade Finance Officer ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.48,170/- முதல் ரூ.69,810/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI விண்ணப்ப கட்டணம்:
SC/ ST/ OBC/ PwBD தவிர மற்றவர்களுக்கு ரூ.750/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Trade Finance Officer தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் SBI யின் அதிகாரபூர்வ இணையத்தளமான SBI.co.in யில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.06.2024 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
தேர்வு முறை: விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு கிடையாது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் கொல்கத்தா மற்றும் ஐதராபாத்தில் பணி செய்ய பரிந்துரைக்கப்படும்.
தகுதி காண் காலம் 6 மாதங்கள் ஆகும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://sbi.co.in/web/careers/current-openings விண்ணப்பதாரர்கள் இங்கே கிளிக் செய்யவும்.
மொத்தமுள்ள வர்த்தக நிதி அலுவலர்களுக்கான 150 காலிப்பணியிடங்களில் பொதுப் பிரிவினருக்கு 61, எஸ்.சி பிரிவினருக்கு 36, 38 ஒபிசி பிரிவினருக்கும் மற்றும் 15 ஈடபிள்யூஎஸ் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஷெட்யூல்டு வங்கியில் வர்த்தக நிதித்துறையில் நிர்வாக அல்லது மேற்பார்வையாளராக இரண்டு வருட அனுபவமும் தேவை. இந்த தகுதி, அனுபவத்தின் வாயிலாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நேர்காணலும் நடத்தப்படும். இதற்கும் தனி மதிப்பெண் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்கள் அறிய
https://sbi.co.in/documents/77530/0/060624-sco-05.pdf/03121e9e-14e0-b9fa-6665-4fcef91859e4?t=1717673593920
லிங்க்கை கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment