அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்றுநர் பதவிக்கான, 2,222 காலியிடங்களில், புதிய நியமனத்துக்கான தேர்வு அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, October 26, 2023

அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்றுநர் பதவிக்கான, 2,222 காலியிடங்களில், புதிய நியமனத்துக்கான தேர்வு அறிவிப்பு

 அரசு பள்ளிகளில்  பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்றுநர் பதவிக்கான, 2,222 காலியிடங்களில், புதிய நியமனத்துக்கான தேர்வு அறிவிப்பு


அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்றுனர் பதவிக்கான, 2,222 காலியிடங்களில், புதிய நியமனத்துக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலை பள்ளிகள் வரை, 13,000 ஆசிரியர் காலி பணியிடங் கள் உள்ளன. இவற்றில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்றுனர் பதவியில் உள்ள, 2,222 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


அதன் விபரம்:


விண்ணப்ப பதிவு, https://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில், வரும், 1ம் தேதி துவங்கி, நவ.,30ல் முடிகிறது. போட்டி தேர்வு, ஜன.,7ல் நடக்கிறது



பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் கீழ், 2,171; மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ், 23; ஆதி திராவிடர் நலத்துறையில், 16; மாற்றுத் திறனாளி நலத்துறையில், 12 பேர் என, 2,222 ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன


 இவற்றில், தமிழ், 394; ஆங்கிலம், 252; கணிதம், 233; இயற்பியல், 293; வேதியியல், 290; தாவரவியல், 131; விலங்கியல், 132; வரலாறு, 391 மற்றும் புவியியல், 106 என, பாடவாரியாக காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன


 தேர்ச்சி பெறுவோருக்கு, வழக்கமான, 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். பெண்களுக்கு, 30 சதவீதம் தனி ஒதுக்கீடு வழங்கப்படும். தமிழ் வழி படித்தோருக்கு, 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்


பொது பிரிவினருக்கு, 53; மற்ற பிரிவினருக்கு, 58 வயது நிறைந்திருக்க கூடாது


 பட்டப்படிப்புடன், 2 ஆண்டு தொடக்க கல்வி டிப்ளமா அல்லது பி.எட்., முடித்திருக்கலாம். பிளஸ் 2 அல்லது இணையான மேல்நிலை கல்வி முடித்து, 4 ஆண்டு ஒருங்கிணைந்த தொடக்க கல்வி ஆசிரியர் கல்வியியல் படிப்பு படித்திருக்கலாம்


 மேல்நிலை கல்வி முடித்து, 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வியியல் பட்டப்படிப்பு படித்திருக்கலாம். பட்டப் படிப்புடன் பி.எட்., சிறப்பு கல்வி முடித்திருக்கலாம்.


இந்த கல்வி தகுதியுடன் தங்களுக்கான பாடப்பிரிவுகளில், தமிழக ஆசிரியர் தகுதி தேர்வின், 2ம் தாளில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்.


வழக்கு இருக்கு!


ஆசிரியர் நியமனம் குறித்த அறிவிப்பை பார்த்து, பட்டதாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், பணி நியமனங்கள் தொடர்பாக, சென்னை மற்றும் மதுரை கிளை உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் உத்தரவை பொறுத்து, நியமனம் அமையும் என்ற குறிப்பு அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது. அதனால், விரைவில் வேலை கிடைக்குமா என, பட்டதாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர்.


வெயிட்டேஜ் மார்க்'


50 மதிப்பெண்களுக்கான எழுத்து தேர்வு நடக்கும்; குறைந்தபட்சம், 20 மதிப்பெண் பெற வேண்டும். தமிழ் தெரியாதவர்கள் தேர்ச்சி பெற்றாலும், பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குள், டி.என்.பி.எஸ்.சி.,யின் தமிழ் இரண்டாம் வகுப்பு மொழி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் பிரதான தாள் ஒவ்வொரு பாடப்பிரிவிலும், 150 கேள்விகளுடன், 3 மணி நேரம், 150 மதிப்பெண்களுக்கு நடக்கும். பொது பிரிவினர், 60 மதிப்பெண்களும், மற்றவர்கள், 45 மதிப்பெண்களும் பெற்றால் தேர்ச்சியாக கருதப்படும். ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு, தேர்வு முடித்ததில் இருந்து, ஒவ்வொரு ஆண்டுக்கும், 0.5 மதிப்பெண் வெயிட்டேஜாக வழங்கப்படும்.

No comments:

Post a Comment