தேர்வின்றி தபால் துறையில் 12,828 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, June 18, 2023

தேர்வின்றி தபால் துறையில் 12,828 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு

தேர்வின்றி தபால் துறையில் 12,828 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் தபால் துறையில் பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் பிரிவுகளில் காலியாக உள்ள 12,828 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. 

இந்த பணிக்கு விண்ணப்ப தேதி முடிவடைந்த நிலையில் தற்போது அதற்கான நாள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

 மத்திய தகவல் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால் துறை இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் தபால்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் 2023ம் ஆண்டில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தபால்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு: 

 இந்திய தபால் துறையில் மொத்தம் 12,828 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் பிபிஎம் (Branch Post Master/BBM)பிரிவு மற்றும் உதவி பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் (Assistant Branch Postmaster/ABPM) பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளன.

 இதில் தமிழ்நாட்டிலும் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 18 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 

அண்டை மாநிலங்களான கர்நாடகா 48, தெலங்கானாவில் 96, ஆந்திரா 118 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதுதவிர மற்ற காலிப்பணியிடங்கள் பிற மாநிலங்களில் நிரப்பப்பட உள்ளது.

 இதில் பிபிஎம் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.12 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.29,380 வரையும் சம்பளம் கிடைக்கும். ஏபிபிஎம் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.24,470 வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்சம் என்றால் விண்ணப்பத்தாரர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். 

இதில் ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், மாற்று திறனாளிகளுக்கு 10 வயது முதல் 15 வயது வரை வயது தளர்வு உண்டு. வயது வரம்பு என்பது 2023 ஜூன் மாதம் 11ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

 இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் மதிப்பெண் வாரியாக ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு பணிக்கு நியமனம் செய்யப்படுவார்கள். 

இதன்மூலம் எழுத்து தேர்வு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது என வேலைவாய்ப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

 தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் www. indiapostgdsonline.gov.in எனும் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். 

விண்ணப்பம் செய்ய ஜூன் மாதம் 11ம் தேதி கடைசி நாள் என முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

தற்போது அதற்கான தேதி என்பது ஜூன் 23 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இந்த திருத்தப்பட்ட தேதியின் அடிப்படையில் விண்ணப்பம் செய்வோர் ஜூன் 24ம் தேதி முதல் ஜூன் 26ம் தேதிக்குள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment